2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 ஜூன் 19 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே மாதத்தில் இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22 வீதத்தால் அதிகரித்துள்ளதென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதன் அறிக்கையின் பிரகாரம், 2013ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 438,653 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13.2 வீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதல் 10 சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படுவதுடன், பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் காணப்படுகின்றன. ஏனைய இடங்களை பிரான்ஸ், மாலைதீவுகள், அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கொண்டுள்ளன.
 
கடந்த மாதம் இந்தியாவிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியிருந்ததுடன், இந்த எண்ணிக்கை 17,233 ஆக அமைந்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .