2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மாதாந்தம் 50 ரூபாவுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்புறுதி

A.P.Mathan   / 2014 ஜூன் 23 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி காப்புறுதி சேவைகளை வழங்கும் ஜனசக்தி இன்சூரன்ஸ் உடன் இணைந்து ஹட்ச் தனது வாடிக்கையாளர்களுக்கு வசதியான முறையில் காப்புறுதி சேவைகளை வழங்க முன்வந்துள்ளது. மாதாந்தம் 50 ரூபா எனும் குறைந்தளவு தொகையில் விபத்து மற்றும் ஆயுள் காப்புறுதிகளை ஹட்ச் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். 
 
ஹட்ச் வாடிக்கையாளர் கட்டமைப்பை (முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு) சேர்ந்தவர்கள் தற்போது *235# என்பதை அழுத்தி இரண்டு காப்புறுதி திட்டங்களிலிருந்து தமக்கு அவசியமான திட்டத்தை தெரிவு செய்து கொள்ள முடியும். ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான பிரத்தியேக விபத்து காப்புறுதி மற்றும் 100,000.00 ரூபா பெறுமதியான இயற்கை மரண ஆயுள் காப்புறுதியை மாதாந்தம் 50 ரூபா எனும் கட்டணத்துக்கு பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவது தெரிவாக, மில்லியன் ரூபா பிரத்தியேக விபத்து காப்புறுதி மற்றும் 200,000.00 ரூபா இயற்கை மரண ஆயுள் காப்புறுதி ஆகியவற்றை மாதாந்தம் 99 ரூபா எனும் கட்டணத்துக்கு பெற்றுக்கொள்ளலாம். முதற்கட்ட உள்வாங்கலை தொடர்ந்து, மாதாந்த புதுப்பித்தல் தவணைக் கட்டணங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களின் ஹட்ச் இணைப்புகளிலிருந்து அறவிடப்படும். இந்த விசேட கொடுப்பனவு என்பது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய எதிர்பாராத சம்பவங்களின் போது உதவும் வகையிலும், விபத்து அல்லது இயற்கையான நிலையில் மரணம் அல்லது நிலையான அங்கவீனம் போன்ற சந்தர்ப்பங்களில் கைகொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
 
'கடந்த காலங்களில் காப்புறுதி ஒன்றை பெற்றுக் கொள்வது என்பது மிகவும் சிக்கலான விடயமாக அமைந்திருந்தது. அத்துடன் அதிகளவு காலம் செலவாகும் விடயமாகவும் அமைந்திருந்தது. இதன் காரணமாக மக்கள் தமக்கு அத்தியாவசியமாக காப்புறுதிகளை பெற்றுக் கொள்வதிலும் அதிகளவு அக்கறை செலுத்தவில்லை. தற்போது மொபைல் தொழில்நுட்பம் மற்றும் இலகு கொடுப்பனவு முறைகள் போன்றவற்றின் அறிமுகத்துடன், ஹட்ச் ஊடாக ஜனசக்தி காப்புறுதி தீர்வுகளை வசதியான முறையில் நேரடியாக நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்' என ஹட்ச் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா தெரிவித்தார். 
 
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பொது காப்புறுதி பிரிவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி தயாளனி அபேகுணவர்தன கருத்து தெரிவிக்கையில், 'ஹட்ச் உடனான பங்காண்மை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 20 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் இணைப்புகளுடன் நாடு முழுவதும் சேவைகளை வழங்கி வரும் கையடக்க தொலைபேசி துறை என்பது நிதிப் பாதுகாப்பு தொடர்பான அனுகூலங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வகிக்க முடியும். சிக்கனமானது என்பதுடன், இலகுவான முறையாகவும் அமைந்துள்ளது. இலங்கையில் நிதிசார் பாதுகாப்பு சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜனசக்தி இன்சூரன்ஸ், தொலைத்தொடர்பாடல் புத்தாக்கங்களுக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவதுடன், ஹட்ச் உடனான எமது பங்காண்மையின் மூலம், இந்த துறையில் எமது நிலையை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஹட்ச் தனது உண்மையான வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் உறுதியான எதிர்காலத்தை வழங்க முன்வந்துள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார். 
 
ஹட்ச் ஐ சேர்ந்த நாம் இந்த விசேட காப்புறுதி திட்டத்தை வடிவமைப்பதில் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளோம், ஏனெனில் இது மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஆயுள் மற்றும் விபத்து காப்புறுதிக்கான கொடுப்பனவுகள் மாதாந்த அடிப்படையில் சகாய விலையில் அமைந்துள்ளதுடன், விண்ணப்பப்படிவங்கள் எதனையும் பூர்த்தி செய்யாமல், முகவர்களை சந்திக்காமல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படாமல் இந்த திட்டங்களுடன் இணைந்து கொள்ள முடியும். ஏனைய வருடாந்த காப்பீடுகள் மற்றும் அர்ப்பணிப்புகளுக்கு அமைய இயங்கும் காப்புறுதி திட்டங்கள் போலல்லாமல், இந்த சேவை என்பது மாதாந்த காப்பீட்டு அடிப்படையில் வாடிக்கையாளருக்கு அதிக வசதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. கட்டணங்களை செலுத்தும் மாதங்களில் குறித்த வாடிக்கையாளர் காப்பீட்டை பெறுவார்கள். திட்டத்துடன் இணைந்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அனுகூலம் பெறும் நபர் ஒருவரை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதுடன், SMS ஊடாக இலகுவான முறையில் இந்த நபரை உள்ளடக்க முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X