Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 நவம்பர் 12 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர் மொபிடெல், இலங்கையில் SAMSUNG KNOX தீர்வுகளின் ஏக மீள் விற்பனையாளராக Samsung Electronics லிமிட்டெட்டினால் நியமிக்கப்பட்டுள்ளது. SAMSUNG KNOX என்பது பரிபூரண Enterprise Mobility Management (EMM) பாதுகாப்பு தீர்வாக அமைந்துள்ளதுடன், நிதி நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள், அரசாங்க முகவர் நிறுவனங்கள் மற்றும் வியாபாரங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் தமது சொந்த கையடக்க சாதனங்களை தொழில் நிலையங்களில் அல்லது தொழிலக சாதனங்களை தமது தினசரி செயற்பாடுகளில் பயன்படுத்தும் போது உயர் மட்ட பாதுகாப்பை குறித்த நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. வியாபாரங்களுக்கு தரவுகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றுக்கு நீண்ட பாதுகாப்பு தீர்வுத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் SAMSUNG KNOX அமைந்துள்ளது.
அன்ட்ரொயிட் கட்டமைப்பில் இயங்கும் Samsung கையடக்க தொலைபேசிகளுக்கு SAMSUNG KNOX விசேடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அயடறயசந தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உச்ச பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. கூட்டாண்மை தரவுகளின் பாதுகாப்பை IT administratorகள் உறுதி செய்யக்கூடியதாக இருக்கும் என்பதுடன், ஊழியர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதிக்காத வகையில், அவற்றை தன்னியக்கமாக கையாண்டு உதவிகளை வழங்கக்கூடியதாக இருக்கும். மொபைல் சாதனத்தினுள் பாதுகாப்பான சூழலை வழங்கும் வகையில் Samsung KNOX அமைந்துள்ளது. அந்த சொந்த முகப்பு திரையில் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும், செயற்படுத்துகைகள், அப்ளிகேஷன்கள் மற்றும் விட்ஜட்கள் போன்றவற்றை கொண்டுள்ளன. 'தரவுகள் கசிவு| இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான வலிமையான தீர்வாக இது அமைந்துள்ளது. அன்ட்ரொயிட் கட்டமைப்புக்கான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தீர்வாக அமைந்துள்ளதுடன், வெளியக இடர்கள் மற்றும் malwareக்கான பாதுகாப்பாகவும் அமைந்துள்ளது.
பிரத்தியேக மற்றும் வியாபார பாவனைக்காக வௌ;வேறு கட்டணப்பட்டியல்களை செலுத்தக்கூடிய தெரிவுகளையும் Knox கொண்டுள்ளது. பிரத்தியேக தரவுகள் பாவனை மற்றும் தொழில்சார் அழைப்புகள் போன்றவற்றுக்கு வெவ்வேறு கட்டணப்பட்டியல்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தொழில்சார் அழைப்புகளையும் பிரத்தியேக தரவுகளையும் வேறாக்கி முறையே பாவனையாளருக்கும், நிறுவனத்திடமிருந்தும் தனித்தனியாக கட்டணம் அறிவிடக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.
Samsung KNOXஐ பின்பற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு பணத்தை மீதப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும், cloud அடிப்படையிலான EMM தீர்வுகள் உங்கள் மொபைல் பாவனையாளர்களின் செலவீனங்களை கட்டுப்படுத்தக்கூடிதாக அமைந்துள்ளன. அத்துடன், cloud அடிப்படையிலான EMM தீர்வுகளை எளிமையாக செயற்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், துரிதமாக இயங்கக்கூடியன. இவை தற்போதைய உட்கட்டமைப்புடன் ஒன்றிணையக்கூடியன என்பதுடன், பாதுகாப்பான மொபைல் கட்டுப்பாட்டை on-premises hardwareஐ பதிவு செய்து நிர்வகிக்காமல் மேற்கொள்ளக்கூடிய வசதியை கொண்டுள்ளதால் பராமரிப்பதும் இலகுவானது. இந்த தீர்வின் மூலமாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. உறுதியான EMM தீர்வின் மூலமாக, cloud உடன் தொடர்புடைய பாதுகாப்பு இடர்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.
இலங்கையில் Samsung KNOX தீர்வை சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மொபிடெல் பிஸ்னஸ் சொலூஷன்ஸ் (MBS) முன்னெடுக்கும். கூட்டாண்மை வாடிக்கையாளர்களின் பிரத்தியேகமான தகவல் தொடர்பாடல் தீர்வு தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மொபிடெல் நிறுவியுள்ள அர்ப்பணிப்பான பிரிவாக இது அமைந்துள்ளது. மொபிடெல் பிஸ்னஸ் சொலூஷன்ஸ் (MBS) ஐ 0711 717171 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது mbs@mobitel.lk எனும் மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்பு கொள்ள முடியும்.
11 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
4 hours ago