2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

‘U.H.E ஹல்பே டீ’ க்கு ஆறு விருதுகள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

U.H.E குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான, உலகப்புகழ் பெற்ற இலங்கையின் தேயிலை உற்பத்தி வர்த்தக நாமமான ஹல்பே டீ, இலங்கையின் ஏற்றுமதி துறையில் வழங்கப்படும் அதியுயர் விருதுகள் வழங்கும் நிகழ்வான, தேசிய ஏற்றுமதியாளர் விருதுகள் 2016 இல், ஆறு விருதுகளை தனதாக்கியிருந்தது. இதில், விசேட விருதுகள் உள்ளடங்குவதுடன், அறிமுகப்படுத்தப்பட்டிருந்த மறைந்த பட்ரிக் அமரசிங்க சவால் கேடயத்தையும் வென்றிருந்தது.   

வருடாந்த தேசிய ஏற்றுமதியாளர் விருதுகளினூடாக, உள்நாட்டு பொருளாதாரத்துக்கு ஏற்றுமதியாளர்கள் வழங்கும் பங்களிப்பு கௌரவிக்கப்படுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்கள் வழங்கும் பங்களிப்புக்கு வெகுமதிகளை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.   

24ஆவது ஆண்டாக நடைபெற்ற இவ் விருதுகள் வழங்கும் நிகழ்வை வருடாந்தம் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் வெற்றியாளர்கள் சுயாதீன நடுவர்கள் குழாமினால் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   
இந்த ஆண்டின் வைபவத்தின் போது, தேயிலை மற்றும் மூலிகை பொருட்களை ஏற்றுமதி செய்யும் மற்றும்

நேரடியாக தொழிற்சாலையிலிருந்து விநியோகிக்கும் ஹல்பே டீ, ஆறு விருதுகளை தனதாக்கியிருந்தது. தேயிலைக்கான தங்க விருது, பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலைக்கான தங்க விருது, மொத்த தேயிலை துறையின் சிறந்த ஏற்றுமதியாளர் தங்க விருது, சிறிய, நடுத்தர அளவு சிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்க விருது, துறையுடன் தொடர்புடைய வியாபாரங்களில் புத்தாக்கமான ஏற்றுமதியாளருக்கான வெள்ளி விருது மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த “பட்ரிக் அமரசிங்க சவால் கேடயம்” வெற்றியாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.   

3.5 வருடங்கள் எனும் குறுகிய காலப்பகுதியினுள், ஹல்பே டீ என்பது தற்போது நிறுவனம் எனும் வகையில் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், ஏற்றுமதித்துறையில் வௌ;வேறு பரிமாணங்களில் செயற்பாடுகளை முன்னெடுத்த வண்ணமுள்ளது. புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை வெளிப்படுத்திய வண்ணம் வியாபாரச் சிறப்பையும் சமூகத்தில் பேணி வருகிறது.   

ஹல்பே டீ (U.H.E எக்ஸ்போர்ட்ஸ்) தலைமை அதிகாரியும், U.H.E குழுமத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான எரந்த அபேரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பெறுமதி வாய்ந்த விருதுகளை பெற்றுக் கொண்டமை என்பது பெரும் கௌரவத்தை வழங்குவதுடன், ஏற்றுமதி துறையில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாட்டை பிரதிபலிப்பது மட்டுமின்றி, ஹல்பே டீ பேணி வரும் புத்தாக்கம், தொழில் முயற்சியாண்மை மற்றும் தொழில் செயலணியின் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு துறையிலிருந்து கிடைத்துள்ள கௌரவிப்பாகவும் அமைந்துள்ளது.” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X