2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மொபிடெல் அறிமுகம் செய்த NOKIA 107 மற்றும் 108

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
NOKIA  107 மற்றும் 108 சொஃப்ட்லொஜிக் உடன் இணைந்து வியத்தகு இணைப்புகள் விநியோகத்தை மொபிடெல் அறிமுகம் செய்துள்ளது

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட NOKIA 107 மற்றும் 108 இற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பை வழங்கும் வகையில், தேசிய கையடக்கத் தொலைபேசி வழங்குனரான ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் ஆனது த NOKIA கோர்ப்பரேன் உடன் கைகோர்த்துள்ளது. இந்த ஆண்டில் NOKIA அறிமுகம் செய்திருந்த விலை குறைந்த கையடக்கத் தொலைபேசிகளின் வரிசையில் முன்னிலை வகிக்கும் கையடக்க தொலைபேசி மாதிரிகளாக அமைந்துள்ளன.

மொபிடெல் மற்றும் சொஃப்ட்லொஜிக்; காட்சியறைகளில் கொள்வனவு செய்யும் NOKIA 107 மற்றும் 108 மாதிரி கையடக்க தொலைபேசிகளுடன் ரூ.250/- போனஸ் உடன் இணைந்த விசேட மொபிடெல் முற்கொடுப்பனவு இணைப்புடன் விற்பனை செய்யப்படுவதுடன், இலவசமாக முற்கொடுப்பனவு சிம் அட்டையும் வழங்கப்படுகிறது. இந்தப் இணைப்பு குறுந்தகவல் மற்றும் குரல் மூல அழைப்பு வசதிகளுக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூ.50/- இற்கும் விசேட ரூ.5/- போனஸை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

NOKIA 107 இன் விலை 3790 ரூபாவாக அமைந்துள்ளதுடன், NOKIA 108 இன் விலை 4490 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொபிடெல் முற்கொடுப்பனவு இணைப்புகளுக்கு வெகுமதிகளுக்கு மேலதிகமாக, இந்த கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, மாற்றீடு செய்து கொடுக்கப்படும் உத்தரவாதம், கையடக்க தொலைபேசிக்கு ஒரு வருட காலத்துக்கான உத்தரவாதம், உதிரிப்பாகங்களுக்கு ஆறு மாத கால உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. வர்ண ஒளித்திரை, பாவிக்காத நிலையில் ஒரு மாத காலம் வரை நிலைத்திருக்கக்கூடிய பற்றரி ஆயுள் காலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தட்டச்சு செய்யக்கூடிய கீபாட் வசதிகள் போன்றனவும், இரட்டை சிம் மற்றும் ஹான்ட்ஸ் ஃப்ரீ வசதிகளையும் கொண்டு இந்த இரு வகையான கையடக்க தொலைபேசிகளும் அமைந்துள்ளன.


இரு தொலைபேசிகளும் வர்ண திரையை கொண்டுள்ளதுடன், இரட்டை சிம் பயன்படுத்தக் கூடிய வசதியையும் கொண்டுள்ளது. dust-proof keymat  உடனும் காணப்படுகிறது. NOKIA 107 இல் FM  ரேடியோ,  flashlight  காணப்படுவதுடன், NOKIA 108 இல் Bluetooth> Dust  proof keymat>  NOKIA வின் விசேட Slam  வசதியுடன் அமைந்துள்ளதுடன், ஹான்ட்ஸ் ஃப்ரீ மற்றும் ஒரு வருட உத்தரவாதத்துடன் அமைந்துள்ளது.

இரு வகையான NOKIA 107 மற்றும் 108 போன்றவற்றை அனைத்து மொபிடெல், சொஃப்ட்லொஜிக் விற்பனை நிலையங்களில் இருந்தும் நாடு முழுவதும் காணப்படும் விநியோகத்தர்களிடமிருந்தும் கொள்வனவு செய்து கொள்ளலாம்.

மொபிடெல் மற்றும NOKIA ஆகியன இணைந்து முன்னெடுக்கும் மற்றுமொரு இணைந்த சேவையான இது அமைந்துள்ளது. நவீன தொழில்நுட்ப சந்தையை வாடிக்கையாளர்களுக்கு அருகில் கொண்டு வரும் நோக்கில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆசிய பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பாவனையாளர்களுக்கென விசேடமாக குறைந்த செலவில் NOKIA மூலம் வடிவமைக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளான NOKIA 107 மற்றும் 108 ஆகியன அமைந்துள்ளன. சர்வதேச வர்த்தக நாமம் எனும் வகையில் NOKIA தொடர்ச்சியாக மாற்றமடைந்துவரும் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன், உயர்ந்த சேவைகளை அறிமுகம் செய்யும் தயாரிப்புகளையும் அறிமுகம் செய்து வருகிறது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X