2026 மே 04, திங்கட்கிழமை

கைக்குழந்தை உட்பட நால்வரின் எலும்புக்கூடுகள் மீட்பு

Janu   / 2026 மே 04 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் திங்கட்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, ஒரு கைக்குழந்தையினுடையது உட்பட மேலும் நான்கு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்று அடையாளம் காணப்பட்ட இந்த நான்கு எலும்புக்கூடுகளும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, குறித்த புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய அகழ்வு பணிகளின் முடிவில், புதைகுழியிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .