2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

99x டெக்னொலஜி சாதனை

Gavitha   / 2017 ஜனவரி 09 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழங்கிய பங்களிப்பு மற்றும் வியாபாரத்தில் எய்திய உன்னத நிலை என்பவற்றுக்காக, 99x டெக்னொலஜி 3ஆவது வருடமாக தேசிய வர்த்தகச் சிறப்புக்காக, 2016 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் தங்க விருதைத் தனதாக்கியிருந்தது.  

அதுமட்டுமல்லாது நடுத்தர அளவு என்ற வகையில், வெண்கல வெற்றியாளர் என்ற விருதையும் இதே நிகழ்வில் பெற்றிருந்தது.  

இந்த விருதுகள் மூலமாக ஆளுகை, சுற்றாடல் மேன்தகுத்தன்மை, வலுவூட்டல் என பல் துறைகளிலும் 99x டெக்னொலஜி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அங்கிகாரமளித்துள்ளது.  

இலங்கையினுள் மிகச் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்படும் நிறுவனங்களில் ஒன்று என நாம் வரிசைப்படுத்தப்பட்ட
தையிட்டு பெருமைக்கொள்கிறோம் என 99x டெக்னொலஜியின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம் கூறினார்.  

இந்தக் கம்பனி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் தகவல், தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தில் விருதுகளை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தேசிய வர்த்தகச்சிறப்புகள் விருதுகள் வழங்கல் என்பது இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் முக்கியமான நிகழ்வாகும்.  

99x டெக்னொலஜி விருது பெற்ற மென்பொருள் உற்பத்தி என்ஜினியரிங் கம்பனியாகும். ஐரோப்பிய சந்தையில் அதிகளவு ஈடுபாட்டை கொண்டுள்ளதுடன், உலகெங்கும் உள்ள சுயாதீன மென்பொருள் வியாபாரிகளுக்கு உயர்மென்பொருள் உற்பத்தி சேவைகளை வழங்குவதில் இந்தக் கம்பனி சிறப்புத் தேர்ச்சிப் பெற்றுள்ளது.  

இந்தக் கம்பனி, 2015இல் தொழில்புரிய மிகவும் உன்னதமான 25 நிறுவனங்களில் ஒன்றாக, தொடர்ந்து நான்கு வருடங்களாக திகழ்கின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X