Kogilavani / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(சி.குருநாதன்)
முல்லைத்தீவில் ஹட்டன் நஷனல் வங்கிக்கிளை கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, முல்லைத்தீவில் ஐந்து பாடசாலைகளின் வாசிகசாலைகளுக்கு வங்கியினால் புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. வறிய மாணவர்களுக்கான சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றிற்கான புத்தகங்களும்; அம்மாணவரிடம் கையளிக்கப்பட்டன. வலது குறைந்த ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், வங்கியின் தலைமை நிறைவேற்று அதிகாரியான ஜோனாதன் அலெஸ் பிரதம அதிதியாகவும், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.சி.மோகன்ராஸ், வங்கியின் பிரதி பொது முகாமையாளர் திருமதி கிறிசாந்தி தம்பையா, வங்கியின் வடபிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் ஜெயராஜசிங்கம், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் ஏ.வி.பீடில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
8 minute ago
28 minute ago
34 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
34 minute ago
38 minute ago