2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2013ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகை இலக்கு எய்தப்பட்டுள்ளது

A.P.Mathan   / 2014 ஜனவரி 09 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு 2013ஆம் ஆண்டில் மொத்தமாக 1.27 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்திருந்ததாகவும், கடந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை விட 0.07 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மேலதிகமாக வருகை தந்திருந்தனர் என இலங்கை சுற்றுலாச் சபை அறிவித்துள்ளது.
 
கடந்த நவம்பர் மாதம் வரை இலங்கைக்கு மொத்தமாக 1,016,228 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை தந்திருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பட்சத்தில் கடந்த ஆண்டுக்கான இலக்கு எய்தப்பட வேண்டிய நிலையில், கடந்த ஆண்டில் வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளை கணக்கிடும் முறையில் சில திருத்தங்களை மேற்கொண்டிருந்ததன் பின்னர், இந்த இலக்கை தாம் எய்தியிருந்ததாக சுற்றுலாச் சபை அறிவித்திருந்தது.
 
புதிய கணக்கிடும் முறை, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மூலம் வழங்கப்படும் கணனித் தரவுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டிருந்ததாக சுற்றுலாச் சபை தெரிவித்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .