2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ஹமில்டன் கால்வாய் மறுசீரமைப்பு

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் வட பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய கால்வாயான ஹமில்டன் கால்வாயை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதற்காக 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆரம்பப் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

பிரித்தானியர்களின் மூலம் 1802ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கால்வாய், வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. நீர்கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த கால்வாய் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .