2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இலங்கையில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மனிதன் – யானைகளுக்கிடையில் முறுகலை ஏற்படு

A.P.Mathan   / 2013 மார்ச் 28 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் யானைகள் செறிவாக வாழும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்குமென சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

யானைகள் பொதுவாக தாம் வளர்ந்து வாழ்ந்து வரும் பகுதிகளிலேயே அதிகளவில் வசிக்க விரும்புகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், அவற்றை பிரிதொரு இடத்துக்கு இடம்மாற்றி அவை வசித்த பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது பெருமளவில் சாத்தியப்படாது எனவும், அவ்வாறு இடம்மாற்றப்படும் யானைகள் மீண்டும் தாம் வசித்த பகுதிகளுக்கே வருகை தர அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் சூழல் மத்திய நிறுவனத்தின் பணிப்பாளர் மனோரி குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலைக்கு சிறந்த உதாரணமாக மத்தல பகுதி அமைந்துள்ளது. கடந்த நாட்களில் இது தொடர்பான பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. தற்போது மத்தல விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தினுள் யானைகள் உட்புகாத வண்ணம் மின்சார வேலிகள் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன. எனவே இது ஒரு பெரிய பிரச்சினையாக அமையாது. ஆயினும், இந்த விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் கடைகள், அங்காடிகள் போன்றன அமைக்கப்படும்போது பிரச்சினைகள் ஆரம்பிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விமான நிலையத்தை நிறுவ 800 ஹெக்டெயார் நிலப்பரப்பு உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமான நிலையத்தை அண்மித்து 2000 ஹெக்டெயார் பரப்பளவு பகுதியில் பொருளாதார மையம் ஒன்று நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .