2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விற்பனையாளர்களுக்கு பாங்கொக் சுற்றுப்பயண வாய்ப்பை வழங்கும் அட்லஸ்

A.P.Mathan   / 2013 ஜூலை 16 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் மிகப்பெரிய காகிதாதிகள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் நிறுவனமான சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் (அட்லஸ்), சிறப்பாக பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்த தமது விற்பனையாளர்களுக்கு பாங்கொக் சென்று வருவதற்கான சுற்றுப்பயண வாய்ப்பை வழங்கும் நிகழ்வை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் (அட்லஸ்) நிறுவனத்தின் தலைவர் ராசகாந்த ராசையா பங்குபற்றியிருந்தார். இந்த நிகழ்வின் போது, 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்த 'Back to School' ஊக்குவிப்பு திட்டத்தில் நாடு முழுவதையும் சேர்ந்த சுமார் 35 விற்பனையாளர்கள் சிறந்த நிதி பெறுபேறுகளை பதிவு செய்திருந்தமைக்காக விருதுகளை பெற்றிருந்தனர் இவர்களுக்கான விருதுகளை சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் (அட்லஸ்) நிறுவனத்தின் தலைவர் ராசகாந்த ராசையா மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி நிர்மல் மதநாயக்க ஆகியோர் வழங்கியிருந்தனர்.  
 
சிலோன் பென்சில் கம்பனி (பிரைவேற்) லிமிடெட் (அட்லஸ்) நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் நிஷாந்த ஹென்னதிகே இந்த நிகழ்வில் உரையாற்றுகையில், 'எமது விற்பனையாளர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு மற்றும் அவர்களின் விற்பனை நடவடிக்கைகளை விஸ்தரித்தக் கொள்வதற்கு நாம் எப்போதும் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பான பங்களிப்பை வழங்கி வருகிறோம். இதன் மூலம் இலங்கையின் காகிதாதிகள் பொருட்கள் சந்தையில் முன்னிலையில் எமக்கு திகழ முடிந்துள்ளது. இந்த இரு தரப்பினருக்குமிடையிலான உறவை மேலும் மேம்படுத்தும் வகையில், சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்த விற்பனையாளர்களை பாங்க்கொக் சென்று வருவதற்கான சுற்றுப்பயண வாய்ப்புகளை நாம் வழங்கியுள்ளோம்' என்றார்.
 
இலங்கையில் காகிதாதிகள் பொருட்கள் விற்பனையில் முன்னணியில் திகழ்வதுடன், அட்லஸ் இலங்கையின் முதலாவது காகிதாதிகள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆய்வுகூடத்தை நிறுவியுள்ளது. வருடாந்தம் தனது பொருட்கள் வரிசையில் பல புதிய உள்ளடங்களை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளுக்கு சற்று களிப்பையும் வழங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
1959ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிலோன் பென்சில் கம்பனி, பாடசாலை மற்றும் அலுவலக காகிதாதிகள் உற்பத்தியிலும் விநியோகத்திலும் முன்னணியில் திகழ்கிறது. இலங்கையில் காகிதாதிகள் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் மத்தியில் டிஸ்னி, மார்வெல் மற்றும் பென் 10 கார்டூன் கதாபாத்திரங்களை தமது தயாரிப்புகளில் பயன்படுத்துவதற்கான உரிமையாண்மைய கொண்டுள்ள ஒரே நிறுவனம் அட்லஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .