2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சேப்டிகா மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ள டிசிஎஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்

A.P.Mathan   / 2013 ஜூலை 17 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


தரவுகள் கசிவதை தடுக்கும் சேப்டிகா என்ற புரட்சிகரமான மென்பொருள் இலங்கையில் டிசிஎஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிக வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகின்ற இந்த மென்பொருள் செக் குடியரசில் மேம்படுத்தப்பட்டது. குறிப்பாக அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள், நாளாந்தம் செய்யும் பணிகள், அவர்கள் கணினிகளை பயன்படுத்தும் காலம், உற்பத்தி திறன் போன்வற்றை கணிப்பீடு செய்து அறிக்கைக்களை நிர்வாகக்குழுவுக்கும், பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கும் அனுப்பும் வகையில் இந்த மென்பொருள் அமைந்துள்ளது.    
 
அலுவலக ஊழியர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்புதல், பென் டிரைவ் (Pen drives), டெப்லட் (Tablet), கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி முக்கிய தரவுகளை நிறுவனத்தின் சகபோட்டியாளர்களுக்கு கசிய விடுவதை கண்டுபிடிக்கக்கூடிய வகையில் இந்த மென்பொருள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 
 
தரவுகள் கசியப்படுவதாக சந்தேகங்கள் ஏற்பட்டால் இம்மென்பொருள் அதனை அலுவலக  நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தும். எனவே நிர்வாகத்தினர் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அத்துடன் தரவுகள் மூன்றாம் நபருக்கு கசிவதை தடுக்கவும், தரவுகள் காணாமல் போவதை தடுக்கவும், இணையத்தள தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் இந்த மென்பொருள் வகை செய்கின்றது. 
 
கணினியில் அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தும் கால எல்லை தொடர்பாக அறிந்துகொள்ள முடியும் என்பதால் அவர்களது உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு இது உதவுகின்றது.  
 
மனிதனால் கணினிகளில் ஏற்படக் கூடிய தவறுகளை முற்றாக தடுக்கும் வகையில் உலகில் அமைக்கப்பட்டுள்ள ஒரேயொரு தரவு கசிவு தடுப்பு மென்பொருளாக இதனை குறிப்பிடலாம். நிறுவனங்களில் ஏற்படும் மனிதத்தவறுகளை கண்டுபிடிப்பதற்கு போதுமான சாதனமாக இதனை குறிப்பிடலாம். இல்லாவிட்டால் பல்வேறு வகையான மென்பொருள்களை நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டி ஏற்படும்.
 
இந்த மென்பொருள் அறிமுக வைபவம் கொழும்பு கலதாரி ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றதுடன் சேப்டிகா டெக்னோலொஜிக்ஸின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி பவெல் கிரவ்ட்டி, வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் மார்வன் சன்னவானி ஆகியோர் கலந்துகொண்டதுடன் இலங்கைக்கான விநியோகத்தர்களான டிசிஎஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நபான் அகீல், பணிப்பாளர் சியான் அன்னன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .