2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஏற்றுமதியாளர்களின் டொலர் விற்பனைக்கமைய ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு

A.P.Mathan   / 2013 ஜூலை 30 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதியாளர்களின் டொலர் விற்பனை அதிகளவில் இடம்பெற்றதை தொடர்ந்து, இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பை வெளிப்படுத்தியிருந்தமையை அவதானிக்க முடிந்தது. ஆயினும், இந்த பெறுமதி கடந்த பத்து மாதங்களில் மிகவும் குறைந்தளவு பெறுமதியாகவே நிறைவடைந்திருந்தது. 
 
வெள்ளிக்கிழமை 131.60-70 ஆக நிறைவடைந்திருந்த டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமை கொடுக்கல் வாங்கல்களின் போது 131.55-65 ஆக பதிவாகியிருந்தது. தொடர்ந்தும் குறுங்கால அடிப்படையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையக்கூடிய நிலை காணப்படுவதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த பெறுமதி 131.50 – 132 ஆக அமைந்திருக்கும் என விற்பனையாளர்கள் அறிவித்திருந்தனர். 
 
இந்த நிலையை முன்னேற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கி நாணய மாற்றுக் கொள்கையில் தலையிட்டு கொள்கையில் இறுக்கமான நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .