2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையின் வரி வருமானம் அதிகரித்து வருகிறது: திறைசேரி செயலாளர் நாயகம்

A.P.Mathan   / 2013 ஜூலை 31 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வரி வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதற்கு நிலையான சுங்க வசூலிப்பு நடவடிக்கைகள் பங்களிப்பை வழங்கி வருகின்றன என திறைசேரியின் செயலாளர் நாயகம் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் வருமானம் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. ஆயினும் ஏப்ரல் மாதத்தை தொடர்ந்து, இறக்குமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையால் இந்த நிலை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முன்னேறி காணப்பட்டது. வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பும் இந்த வருமான அதிகரிப்பில் பங்களிப்பு செலுத்தி வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .