2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பழுதுகளுடனான வாகனங்கள் வீதியில் இயங்க தடை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழுதுகளுடனான வாகனங்கள் முறையாக திருத்தப்படும் வரை, வீதியில் இயங்க முடியாத வகையில் நடைமுறையொன்றை மேற்கொள்ள பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது.
 
வீதிகளில் இடம்பெறும் விபத்துகளுக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக, வாகனங்கள் முறையான விதத்தில் பராமரிக்கப்படாமை, வாகனங்களில் காணப்படும் பழுதுகள் நிவர்த்தி செய்யப்படாமை போன்றன ஏதுவாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பொலிஸாருடன், இலங்கை மோட்டார் வாகன திணைக்களத்தின் அதிகாரிகளும் கைகோர்க்கவுள்ளனர். இவர்கள் வாகனங்களின் விளக்குகள், சமிக்ஞை விளக்குகள், பிரேக், பக்கக் கண்ணாடிகள் மற்றும் வாகனங்களின் உடல் பாகங்களின் தரம் போன்றன குறித்தும் ஆராயவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .