2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அமானா வங்கி கிளை கிண்ணியாவில் திறப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எம்.ஏ.பரீத்

அமானா வங்கியின் 23ஆவது கிளை கிண்ணியாவில் இன்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இல. 264, பிரதான வீதி, கிண்ணியா என்ற முகவரியிலேயே இந்த கிளை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அமானா வங்கி பணிப்பாளர் முகம்மட் அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கிளையினை திறந்துவைத்தார். இந்த நிகழவில் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய ஷரீஆ அடிப்படையில் நாட்டில் இயங்கும் ஒரேயோரு  வங்கியான அமானா வங்கியின் திருகோண மாவட்டத்திற்கான முதலாவது கிளையே இதுவாகும்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .