2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யுனிலீவர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து அமல் கப்ரால் ஓய்வு

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து அமல் கப்ரால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஓய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு முதல் யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் பதவியை பொறுப்பேற்று நிறுவனத்தை மேலும் வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்த பெருமையைக் கொண்ட அமல் கப்ரால், 31ஆண்டுகளுக்கு முன்னர் யுனிலீவர் நிறுவனத்துடன் இணைந்து கொண்டார்.

இலங்கையில் 75 வருடகாலமாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் யுனிலீவர் நிறுவனம், இது வரையில் தனது தலைமைப்பொறுப்பில் இரு இலங்கையர்களை மாத்திரமே நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் அமல் கப்ரால் இரண்டாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமல் கப்ரால் யுனிலீவர் நிறுவனத்தில் பணிபுரிந்த காலப்பகுதியில் யுனிலீவர் பங்களாதேஷ், யுனிலீவர் பிரித்தானியா, யுனிலீவர் இந்தியா போன்ற நாடுகளில் பணியாற்றிய அனுபவத்தை கொண்டுள்ளார்.

இவரது இராஜினாமாவை தொடர்ந்து, நிறுவனத்தின் புதிய தலைவராக ஷசியா சயிட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுனிலீவர் பாகிஸ்தான் நிறுவனத்தின் உப தலைவர் – வாடிக்கையாளர் உறவுகள் மேம்படுத்தல் பிரிவில் பணியாற்றியவராவார்.

இவரின் நியமனத்தின் மூலம் யுனிலீவர் ஸ்ரீலங்காவில் முதல் பெண் தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றவர் எனும் பெருமையையும் இவர் தன்வசம் கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .