2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வலு, கழிவு முகாமைத்துவ துறைகளில் முதலிட சீன நிறுவனம் ஆர்வம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் ஏரோஸ்பேஸ் லோங் மார்ச் இன்டர்நஷனல் நிறுவனம் இலங்கையில் வலு மற்றும் கழிவு முகாமைத்துவ துறைகளில் தனது முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் குவோ சோபிங் தலைமையிலான குழுவினர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் இலங்கையில் லோட்டஸ் டவர் நிர்மாண செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .