2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையின் நிர்மாணப்புரட்சியில் சினைடர் இலக்ட்ரிக் பிரகாசிப்பு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை தற்போது நிர்மாணத்துறை புரட்சியில் காணப்படுகிறது. நாட்டை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு பகுதிகளில் சர்வதேச தரங்களுக்கமைய பாரிய நிர்மாண செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. 
 
இதற்கமைவாக, இலங்கையில் அனைத்து தரப்பினராலும் பரவலாக வரவேற்கப்படும் நிர்மாணத்துறை சார்ந்த கண்காட்சியான 'Construction – 2013' அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தொடர்ச்சியாக 13ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சி நிர்மாணத்துறையில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளதுடன், நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச இந்த கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
 
வலு முகாமைத்துவ தீர்வுகளை வழங்குவதில் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற நிறுவனமான சினைடர் இலக்ட்ரிக் நிறுவனம், இலங்கை தேசிய நிர்மாண சங்கத்துடன் இணைந்து 'Construction – 2013' கண்காட்சிக்கு பிரதான அனுசரணையை வழங்கியிருந்தது.
 
2001 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் சினைடர் இலக்ட்ரிக் நிறுவனம், நிர்மாணத்துறையில் அவசியமான வலு முகாமைத்துவம் தொடர்பான தீர்வுகளை வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் தனது வர்த்தகத்தை மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதுடன், தனது வாடிக்கையாளர்களுடன் உறுதியான பங்காண்மையையும் பேணி வருகிறது.
 
இலங்கையர்களின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்களான இலெக்ட்ரோ சேர்வ், பியான்கோ, மெட்ரோபொலிடன் மற்றும் ஏசிஎல் கேபிள்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தயாரிப்புகளையும் சேவைகளையும் வாடிக்கையாளர்களின் வாசற்படிக்கே கொண்டு வருவதற்கான முழுமையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. தனது அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப அணியை கொழும்பில் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 
பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டியங்கும் நிறுவனம், 100க்கும் அதிகமான நாடுகளில் தனது பிரதிபலிப்பை கொண்டுள்ளது. 140,000க்கும் அதிகமான ஊழியர்கள் வலையமைப்பையும் கொண்டுள்ளது;. அபிவிருத்தியடைந்த நாடுகளிலும், துரிதமாக வளர்ந்துவரும் பொருளாதார சூழ்நிலையை கொண்ட நாடுகளிலும் தனது வர்த்தக செயற்பாடுகளின் மூலமாக 24 பில்லியன் யுரோவை மொத்தப்புரள்வு பெறுமதியாக பதிவு செய்துள்ளது. 
 
கண்காட்சி அறிமுக நிகழ்வில் சினைடர் இலக்ட்ரிக் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரி பிரதீப் சைகியா கருத்து தெரிவிக்கையில், 'இது மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு தருணமாகும். இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த கண்காட்சி நிகழ்வுக்கு பிரதான அனுசரணையாளர்களாக கைகோர்க்க முடிந்தமையானது, பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கை பொருளாதார ரீதியில் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிப் பயணத்தில் வலு முகாமைத்துவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. சினைடர் இலக்ட்ரிக் என்பது தனது வலு முகாமைத்துவ செயற்பாடுகளின் மூலமாக துறைசார்ந்த நிறுவனங்களுக்கு 30வீதமான சேமிப்பை வழங்கி வருகிறது' என்றார். 
 
'2050ஆம் ஆண்டளவில் மொத்த வலுத்தேவையானது இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. சினைடர் இலக்ட்ரிக் இதற்காக மும்முறை தீர்வுகளை வழங்கி வருகிறது. வலுச்சிக்கனமாக பொருட்களை தயாரித்தல், வாடிக்கையாளர்களுக்கு தமது வலு பாவனையை சிக்கனமான முறையில் பயன்படுத்தல் மற்றும் மாற்று வலு மூலங்களை அபிவிருத்தி செய்வதற்கான பங்களிப்பை வழங்குவது போன்றன அவையாகும்' என அவர் மேலும் தெரிவித்தார். 
 
ஒரு நாட்டின் அபிவிருத்தியில் வலு முகாமைத்துவம் என்பது முக்கிய பங்கை வகிக்கிறது. வலு சேமிப்பின் மூலம் நாட்டின் தேசிய வலு வழங்கல் கட்டமைப்பின் சிக்கனமான செயற்பாட்டு வழிகோலுவதுடன், சூழல் பாதுகாப்புக்கும் வழிகோலுவதாக அமைந்துள்ளது. 
 
சினைடர் இலக்ட்ரிக் நிறுவனத்தின் பிரதான நோக்கம் பாதுகாப்பான, நிலையான, சிக்கனமான, வினைத்திறன் வாய்ந்த மற்றும் சூழல்பாதுகாப்பான வலுவை வழங்குவதாகும். நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் வலுவை சிக்கனமான முறையில் உச்ச பயனை பெற்றுக் கொள்வதற்கான வழி முறையை வழங்குகிறது. பல்வேறு சந்தைப்பிரிவுகளுக்கான ஒன்றிணைந்த தீர்வுகளை சினைடர் இலக்ட்ரிக் வழங்கி வருகிறது. தொழில்துறை மற்றும் இயந்திர உற்பத்தித் துறைகள், உட்கட்டமைப்பு மற்றும் பயனுடமைகள் குடிமனைகள் தவிர்ந்த கட்டிடங்கள், குடியிருப்புகளில் தரவு மையங்கள் மற்றும் வலையமைப்புகள் போன்ற பிரிவுகளில் தலைமைத்துவ நிலைகளை வகிக்கிறது.
 
சினைடர் இலக்ட்ரிக் வர்த்தக நடவடிக்கைகளில் பொருட்களும் தொழில்நுட்பங்களும் உள்ளடங்கியுள்ளன. இதில் உலகத்தரம் வாய்ந்த வர்த்தக நாமங்களான மெர்லின் ஜெரின், டெலிமெகானிக், கிளிப்சால், ஏபிசி, ஸ்குயார் டி மற்றும் மொடிகொன் போன்றன உள்ளடங்குகின்றன. 
 
இந்த தொழில்நுட்பங்கள் நிர்வாகத்துக்கு சர்வாம்ச இலத்திரனியல் தீர்வுகளை நிர்மாணத்துறைக்கு வழங்குவதற்கு சிறந்த அடித்தளத்தை வழங்குகின்றன. இலத்திரனியல் விநியோகம், மின்னல் பாதுகாப்பு முகாமைத்துவம், கட்டிட முகாமைத்துவம், வீடியோ பாதுகாப்பு, நுழைவுரிமை கட்டுப்பாடு, எச்விஏசி கட்டுப்பாடு, வலு கண்காணிப்பு, மோட்டர்க் கட்டுப்பாடு, இடர் வலு மற்றும் மீள்உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய வலு போன்ற அனைத்தும் ஒரே தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .