2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் கம்பனிகளுக்கு மத்திய வங்கி உதவி

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் பதிவு செய்யப்பட்ட நிதிசார் தீர்வுகளை வழங்கும் கம்பனிகளுக்கு திரவத்துவ வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 
 
செலவீனங்களை குறைத்தல், மூலதனத்தை வழங்க பங்காளர்களை உடன்பட வைப்பது மற்றும் வைப்புகளை பங்குகளாக மாற்றுவது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள இந்த வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
 
ஒவ்வொரு நிதிசார் கம்பனிகளின் நிலைகளையும் ஆராய்ந்த பின்னர், இதற்கு அவசியமான நிதி வசதிகளை இலங்கை வைப்பு காப்புறுதி நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .