2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குகள் மீது அதிகளவு வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை எதிர்பார்க்கிறது

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொங் கொங் நகரில் இடம்பெற்ற இலங்கை பங்குப்பரிவர்த்தனை தொடர்பான செயலமர்வின் போது, இலங்கையின் பங்குச்சந்தை அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்ப்பதாக இலங்கையின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
இலங்கையைச் சேர்ந்த 11 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த செயலமர்வில், 100க்கும் மேற்பட்ட நிதி முகாமையாளர்கள், உயர் மட்ட முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன சார் அதிகாரிகள் போன்றோர் பங்குபற்றியிருந்ததாக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கை பங்குப்பரிவர்த்தனையின் செயற்பாடுகளில் சர்வதேச தரநிர்ணயங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் சர்வதேச தாபனங்களுடன் இணைந்து செயலாற்ற தாம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலமாக அதிகளவு வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரக்கூடியதாக அமைந்திருக்கும் எனவும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதம அதிகாரி நாலக கொடஹேவா தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .