
'ஹட்டன் பிரதேசத்திலேயே பிறந்து வாழ்ந்துவரும் எனக்கு கொழும்பு புறநகர்ப் பகுதியில் காணியொன்றை சொந்தமாக்கிக் கொள்வது என்பது என் கனவாகக் கூட இருந்ததில்லை. தீவா புதையலுடன் காணி திட்டத்தின் மூலம் காணி பரிசாக கிடைத்துள்ளது என்பதை தீவா குழுவினர் தெரிவித்த போது என்னால் அதை நம்ப முடியவில்லை' என தமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி மிக்க காணி வரம் வழங்கும் தீவா வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தில் மூன்றாவது அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி பி.பி.தேவிகா தெரிவித்தார்.
தீவா வர்த்தகநாமத்தின் கௌரவமிக்க வாடிக்கையாளர்களிற்கு வெகுமதிகளை வழங்குவதே இத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் காரணமாகவே எமது தீவா குழுவினர் மூலம் கொழும்புக்கு அருகாமையில் பெறுமதி மிக்க 3 காணிகளை வாடிக்கையாளர்களிற்கு வெகுமதியாக வழங்கும் நோக்கில் இப்போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்வாண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஊக்குவிப்பு திட்டத்தில் ஒவ்வொன்றும் ரூ.1 மில்லியன் பெறுமதியான மூன்று தொகுதி காணிகளை பெறும் அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தீவா குழுவினர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மாபெரும் வெற்றியாளர் தெரிவுகளுக்கு மேலதிகமாக, 90 நாள் ஊக்குவிப்பு காலப்பகுதியில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு நாளாந்தம் ரூ.10,000 பணப்பரிசாக வழங்கியது. இதன் காரணமாக, தீவா புதையலுடன் காணி ஊக்குவிப்பு திட்டத்தின் ஊடாக தமது கௌரவமிக்க வாடிக்கையாளர்களுக்கு இதுவரை ரூ.4 மில்லியன் பெறுமதியான வெகுமதிகளை தீவா வழங்கியுள்ளது.
பி.பி.தேவிகாவுக்கு முன்னதாக, கடந்த 2013 'தீவா புதையலுடன் காணி' வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் பிலியன்தல பிரதேசத்தை சேர்ந்த பி.டி.நதிஷா பிரியங்கி மற்றும் அம்பேபுஸ்ஸவைச் சேர்ந்த கே.ஆர்.டி.கசுன் தங்கல்ல ஆகியோர் 10 பர்சஸ் அளவு கொண்ட 02 தொகுதி காணியை பெறும் அதிர்ஷ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்டனர். பாலர் பாடசாலை ஆசிரியையும், ஒரு குழந்தைக்கு தாயுமான நதீஷா கொழும்பு அருகாமையில் காணியொன்றை வென்றமை மூலம் தனது கனவு நனவாகியுள்ளது எனவும், அது தனது குழந்தையின் எதிர்காலத்திற்கு ஒரு முதலீடாக அமையும் எனவும் தெரிவித்தார். 18 வயதுடைய பாடசாலை மாணவராகிய கசுனிற்கு இந்த வெற்றி மிக ஆச்சரியத்துக்குரியது. அவரும் இவ் வெற்றியை தனது எதிர்கால தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஹேமாஸ் நிறுவனத்தின்; தீவா குழுவினர் சார்பாக கருத்து தெரிவித்த சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஃபியோனா முனசிங்க, 'கடந்த 2 வருடங்களாக தீவாவின் வருடாந்த நிகழ்வுகளில் மிக முக்கிய திட்டமாக அமைந்த 2013ஆம் ஆண்டிற்கான 'தீவா புதையலுடன் காணி' ஊக்குவிப்பு திட்டத்தை நாம் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளோம். இவ்வருட நிகழ்வில் பங்குபற்றிய வாடிக்கையாளர்களின் தொகை அதிகரித்திருந்தது. நாடுபூராகவுமிருந்து 100,000 அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன' என்றார். ஃபியோனாவின் கருத்துப் படி, வர்த்தகநாமம் மீதான வாடிக்கையாளர்களின் விசுவாசத்தின் சான்றாக இது விளங்குகிறது. தீவாவானது சாமர்த்தியமான இல்லத்தரசிகளுக்கு குறைந்த செலவில் தரமான சலவை தீர்வுகளை வழங்கி வருகிறது. தொடர்ந்தும் நாம் இல்லத்தரசிகளுக்கு அதிக செயற்திறன் கொண்டதும், புத்திசாலித்தனமான சலவை தீர்வுகளை வழங்கவுள்ளோம்' என ஃபியோனா தெரிவித்தார்.