2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஒன்லைன் மூலம் இலங்கையில் முதலீட்டுக்கு விண்ணபிக்க நடவடிக்கை

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மேற்கொள்வதற்கான வசதிகளை இலங்கை முதலீட்டு சபை மேற்கொண்டுள்ளது.
 
இதற்கமைவாக முதலாவது ஒன்லைன் மூலமான விண்ணப்பத்தை பிரித்தானியாவின் எண்ணெய் சேவைகளை வழங்கும் நிறுவனமொன்று சமர்ப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆர்வம் கொண்டிருப்பின் அவற்றின் விண்ணப்பங்களை துரிதமாக கையாளும் வகையில் இந்த வசதியை இலங்கை முதலீட்டு சபை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .