
சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகார வர்த்தகநாமமான சமபோஷ, தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக 'சமபோஷ 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டித்தொடர் 2013' க்கு அனுசரணை வழங்குகிறது. இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகியது.
இந்த வருடம் நடைபெறவுள்ள போட்டிகளில் 480 ஆண்கள் அணிகள் மற்றும் 120 பெண்கள் அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடுபூராகவுமிருந்து 600 பாடசாலைகளைச் சேர்ந்த 9000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபற்றவுள்ளனர். முதற்கட்ட சுற்று போட்டிகள் நாடுபூராகவும் உள்ள 30 நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், வட மாகாணத்தின் திறமைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இம்முறை முதற்தடவையாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும். 21 அணிகள் பங்கேற்கவுள்ள இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இப் போட்டிகளில் போட்டித்தொடரின் சிறந்த ஆண் மற்றும் பெண் வீர வீராங்கனை விருது மற்றும் சிறந்த கோல் காப்பாளர் விருது போன்றன வழங்கப்படவுள்ளன.
இப் போட்டி குறித்து இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொது செயலாளர் ராகுல சிறிவர்தன கருத்து தெரிவிக்கையில், 'போட்டித்தன்மை மிக்க 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையேயான போட்டித்தொடரானது இளம் கால்பந்தாட்ட நட்சத்திரங்களை அடையாளம் காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த போட்டித்தொடர் மூலம் இளம் விளையாட்டு வீரர்கள் உயர் திறமையுடன் போட்டியிடுவதற்கான ஆதரவளிக்கும் வாய்ப்பு எமக்கு கிட்டியுள்ளது. நாடுபூராகவும் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களிற்கு தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த பிளென்டி ஃபூட்ஸ் குழுவிற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
குழந்தைகளின் போசாக்கு குறித்து அக்கறை செலுத்தும் சமபோஷ, எதிர்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாக இப் போட்டித்தொடரிற்கு அனுசரணை வழங்கி வருகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் பல்வேறு கால்பந்தாட்ட போட்டிகளுக்கு அனுசரணை வழங்க எண்ணியுள்ளது' என பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான ஷம்மி கருணாரத்ன தெரிவித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டித்தொடரில் கொழும்பு சாஹிரா கல்லூரி மற்றும் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயம் ஆகியன முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தன.
இந்த பங்காண்மை குறித்து பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் வசந்த சந்திரபால கருத்து தெரிவிக்கையில், 'கால்பந்தாட்டம் உலகம் முழுவதும் மிகப் புகழ் பெற்றது. இதற்கு கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் பொறுமை அவசியமாகும். விளையாட்டிற்கு அவசியமான சமபல போசாக்கு சமபோஷ தயாரிப்பில் உள்ளது. பால், முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள முக்கியமான புரோட்டீன்கள், காபோவைதரேற்று மற்றும் விற்றமின்கள் ஆகியன தானிய ஆகாரமான சமபோஷவிலும் உள்ளடங்கியுள்ளன. அனைத்து விளையாட்டு வீரர்களுக்குமான ஆரோக்கியமான தானிய ஆகாரமாக சமபோஷ விளங்குகிறது.