
முற்கூட்டியே இனங்கண்டு அவற்றுக்கு ஏற்ற சிறந்த பழக்க வழக்க முறைகளை கைக் கொள்வதன் மூலம் பல தொற்றா நோய் நிலைகளிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதன் ஓரங்கமாக ஹேமாஸ் தலவத்துகொட ஆரோக்கியமான வாழ்க்கை முறை கழகத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. சமூகத்திலுள்ள நபர்களின் வாழ்க்கை முறைக்கமைவாக அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான இடர் நிலைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய ஆலொசனைகளை வழங்கும் வகையில் இந்த கழகம் செயற்படவுள்ளது. இந்த நடவடிக்ககைளின் மூலம் இருதயம் தொடர்பான நோய்கள், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்றவற்றுக்கெதிராக தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அண்மையில் வெளியாகியிருந்த உலக சுகாதார தாபனத்தின் அறிக்கைக்கு அமைவாக, 2015 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட 13வீதமான ஆண்களும், 13 வீதமான பெண்களும் தமது வயதுக்கேற்ற நிர்ணயிக்கப்பட்ட உடல் எடையை விட அதிகமான எடையை கொண்டிருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, இலங்கையை சேர்ந்த பெண்கள், ஆண்களை விட அதிகளவு உடல் பருமன் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் உடல் எடை அதிகரித்தவர்களாக காணப்படுகின்றனர். தற்போது 25 வீதமான பெண்களும், 17 வீதமான ஆண்களும் உடல் பருமன் அதிகரித்தவர்களாக காணப்படுகின்றனர். வக்சீன் வழங்கலின் மூலம் தவிர்த்துக் கொள்ளக்கூடிய நோய்களிலிருந்து விடுபட்ட, சிசுமரண வீதம் குறைவடைந்த, பரவும் நோய்கள் குறைந்த நாடுகளில் ஒன்றாக திகழும் அதேவேளை, தொற்றா நோய்களின் பாதிப்பு என்பது ஒவ்வொரு சமூகத்தையும் பாதித்த வண்ணமுள்ளது.
அனைத்து வயதையும் சேர்ந்தவர்களிடையே 65 வீதமான மரணங்கள் (நீரிழிவு மற்றும் இருதயம் சார்ந்த நோய்கள்) தொற்றா நோய்களின் பாதிப்பால் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. (ஆதாரம் உலக சுகாதார தாபன அறிக்கை 2011)
தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலையின் நடவடிக்கையாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை கழகம் அமைந்துள்ளது. 25 வயதிலிருந்து சகலருக்கும் அங்கத்துவ அடிப்படையில் இந்த கழகத்தில் இணைந்து பயன்பெற்றுக் கொள்ள முடியும். விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தொடர்ச்சியான மற்றும் அடிக்கடி பரிசோதனைகளை மேற்கொள்வது, ஆலோசனைகளை பெறுவது, உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்கள் போன்றன இந்த அங்கத்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இவை அனைத்தும் மாதாந்த அங்கத்துவ கட்டணமான 400 ரூபாவுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலவத்துகொட ஹேமாஸ் வைத்தியசாலையின் பொது முகாமையாளர் வைத்தியர் சமிளா ஆரியாநந்த கருத்து தெரிவிக்கையில், 'ஒரு நோயாளியின் நலன்புரி நடவடிக்கையில் மட்டும் கவனம் செலுத்துவதாக இந்த ஆரோக்கிய வாழ்க்கை முறை கழகம் அமைந்துவிடவில்லை. சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. இந்த நிலைகளினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இந்த நடவடிக்கையின் மூலம் பயன்பெறுவார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம். ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் திகழ்வது மட்டுமல்லாமல் உயிர்களை பாதுகாக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.