2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை ஹோட்டல்களின் இலாபம் சரிவடையும் அபாயம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத்துறைக்கு சேவைகளை வழங்கும் வகையில் நாடு முழுவதும் பரந்து காணப்படும் ஹோட்டல்களில் பணியாற்றுவதற்கு போதியளவு ஊழியர்கள் இல்லையென இலங்கை சுற்றுலா ஹோட்டல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்திஸ்ஸ கெஹேல்பன்னல கருத்து தெரிவித்தார். 
 
”அதிகளவான ஹோட்டல்கள் திறக்கப்படுவதால் ஊழியர்களுக்கான கேள்வி காணப்படுவதுடன், குறித்த துறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால் இலங்கையில் ஹோட்டல் துறையில் தற்போது ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ஹோட்டல்கள் அதிகளவு செலவீனங்களை மேற்கொள்ளும் அதேவேளை ஊழியர்களை ஈர்த்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான செலவீனத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .