2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையில் விமானநிலைய ஹோட்டல் மற்றும் கோல்ஃப் திடல் நிறுவ சீன இணக்கம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 14 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஹம்பாந்தோட்டை மற்றும் கட்டுநாயக்க பகுதிகளில் விமான நிலைய ஹோட்டல்கள் மற்றும் கோல்ஃப் விளையாட்டு திடல் போன்றவற்றை நிறுவுவதற்கு சீனா முன்வந்துள்ளது. இதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட சீனா தீர்மானித்துள்ளது.
 
மத்தளை பகுதியில் அமையவுள்ள ஹோட்டல் கோல்ஃப் விளையாட்டு திடலை கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளது. மொத்தமாக 250 அறைகளை கொண்டதாக இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்படவுள்ளது. அத்துடன் வரி விலக்களிக்கப்பட்ட விற்பனை அங்காடித்தொகுதியையும் இது கொண்டமையவுள்ளது என விமான நிலைய மற்றும் ஆகாய போக்குவரத்து சேவைகளுக்கான நிறைவேற்று பணிப்பாளர் ஜொஹான் ஜயரத்ன தெரிவித்தார்.
 
கட்டுநாயக்க பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல் 200 அறைகளை கொண்டமையவுள்ளது. 1000 வாகனங்கள் வரை தரித்து நிறுத்தக்கூடிய வசதிகளை கொண்டமையவுள்ள இந்த ஹோட்டல் தொகுதியிலும் வரி விலக்களிக்கப்பட்ட விற்பனை அங்காடித்தொகுதி ஒன்று உள்ளடங்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .