2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அட்லஸ் அறிமுகப்படுத்தும் - அட்லஸ் ஃபெல்டா

A.P.Mathan   / 2013 நவம்பர் 21 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி காகிதாதிகள் உற்பத்தி நிறுவனமான அட்லஸ் தடித்த மற்றும் மெல்லிய ரேகைகளை வரையக்கூடிய அட்லஸ் ஃபெல்டா (Atlas FELTA) ரக பேனைகளை சந்தையில் முதல் தடவையாக அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆக்கத்திறனுக்கு மேலும் களிபபூட்டும் வகையில் அமைந்த இந்த அட்லஸ் ஃபெல்டா பேனைகள் தடித்த மற்றும் மெல்லிய ரேகைகளை வரையக்கூடிய வகையில் அமைந்துள்ளன. இவற்றைக் கொண்டு வரையவும், வர்ணந்தீட்டவும் முடியும். 12 வர்ண பேனைகளைக்கொண்ட பெட்டிகள் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பேனைகளின் மூலம் எழுதப்படும் எழுத்துக்கள் கழுவிக் கொள்ளக்கூடியவை என்பதுடன், தொடர்ச்சியாக மை சென்றடைவதுடன், எந்த சந்தர்ப்பத்திலும், கசிவு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே சிறுவர்கள் தமது ஆடைகள் கறைபடிந்துவிடும் எனும் பயம் இல்லாமல் இந்த பேனைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். உயர் தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களுக்கு அமைய தயாரிக்கப்படும் இந்த பேனா வகைகள் நச்சுத்தன்மை அற்றதுடன், சந்தையில் காணப்படும் ஏனைய பேனாக்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட காலம் பாவிக்கக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அட்லஸ் ஃபெல்டா என்பது சிலோன் பென்சில் கம்பனியின் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வு நடவடிக்கைகளின் பலனாக தயாரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு ஆக்கத்திறன் வாய்ந்த தீர்வுகளை வழங்கும் வகையில் இந்த தயாரிப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அட்லஸ் மாணவர்கள் மத்தியில் சிந்தனைத்திறனையும், உளசார் அபிவிருத்தியையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்த வர்த்தக நாமமாகும். அட்லஸ் வர்த்தக நாமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிர்மல் மதநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'சிறுவர்களின் உள வளர்ச்சியில் சிந்தனைத்திறன் என்பது முக்கிய பங்கை வகித்து வருகிறது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். பொறுப்புவாய்ந்த ஒரு நிறுவனம் எனும் வகையில் சந்தர்ப்பத்தையும் சிந்தனையையும் தூண்டும் வகையிலான பொருட்களை நாம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .