2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கம்பனிகள் முரண்பாடு சபையின் தலைவராக பாயிஷா முஸ்தபா நியமனம்

Super User   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

கம்பனிகள் முரண்பாடு சபையின் தலைவராக சட்டத்தரணி பாத்திமா பாயிஷா முஸ்தபா மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கம்பனிகள் முரண்பாடு சபை கம்பனிகள் சட்டம் இலக்கம் 07ஃ2007 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டத்தரணிகளான மீராசாஹிப் மஹ்ரூப், டப்ளியூ.ஏ.திலங்க வீரசிங்க, பீ.மானமடுவ மற்றும் சிராஸ் எம்.நூர்தீன் ஆகியோர் இந்த சபையின் உறுப்பினர்களாவர்.

புகழ்பெற்ற சட்டப் பின்னணியைக் கொண்ட பாத்திமா பையிஷா முஸ்தபா மாக்கர், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஷ் முஸ்தபாவின் மகளும் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் சகோதரரியுமாவார்.

சி.எம்.எஸ் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் லண்டன் பல்கலைக்கழகமொன்றில் வர்த்தகம் மற்றும் கம்பனி சட்டத்தில் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார்.இவர் பொதுநலவாய வர்த்தக பெண்கள் (இலங்கை) தலைமைத்துவ குழுவின் ஸ்தாபக அங்கத்தவராக உள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .