2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நிதிசார் நிறுவனங்களை குறைக்க நடவடிக்கை: நிவார்ட் கப்ரால்

A.P.Mathan   / 2014 ஜனவரி 03 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் காணப்படும் மொத்தம் 58 வங்கி சாராத நிதிசார் நிறுவனங்களை 20 பாரிய நிதி நிறுவனங்களாக ஒன்றிணைத்து குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
 
நாணய மாற்றுக் கொள்கை தொடர்பான வருடாந்த அறிக்கையை வெளியிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே. அவர் இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.
 
நிதிசார் கம்பனிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மற்றும் வங்கிகளுடன் இணைந்து ஒரு கம்பனியாக செயற்படுவதற்கு ஊக்குவிக்கப்படும். வெளி முதலீட்டாளர்கள் குறித்த நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக கவரப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
 
2014 ஜூன் மாதமளவில் ஒரு குழுமத்தின் கீழ் ஒரு நிதிசார் நிறுவனத்தை மட்டுமே கொண்டிருக்க முடியுமென அஜித் நிவார்ட் கப்ரால் மேலும் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .