
நாட்டில் அண்மைக்காலமாக பரவலாக இடம்பெற்ற மதங்களுக்கிடையில் பிணக்கை ஏற்படுத்தும் செயற்பாடுகளை எதிர்வரும் காலங்களில் எந்த வகையில் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பாக குறித்த தலைப்பில் அதிகளவு ஈடுபாடு கொண்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் பங்குபற்றும் கருத்தரங்கொன்று தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவகத்தின் (SAPRI) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
'அமைதியான ஒத்திணங்கிய வாழ்வு, மத சகிப்புத்தன்மை மற்றும் பன்மைச் சமூகங்கள்' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த கருத்தரங்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பி.ப. 3 மணி முதல் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் பேராசிரியர் ரஜீவ் பார்கவா, இலங்கையின் பேராசிரியர் ராதிகா குமாரசுவாமி, ஃபிரான்ஸ் நாட்டின் கலாநிதி கிறிஸ்டோபி ஜெப்ரிலொட் மற்றும் பாகிஸ்தானின் அஸ்மா ஜஹாங்கிர் ஆகியோர் கலந்து கொண்டு தமது அனுபவத்தினூடான தமது நிலைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்கவுள்ளனர்.
இந்த கருத்தரங்கில் ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 011 2576 666, 011 2576 555 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு அல்லது info@thesapri.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதன் மூலம் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.