2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உரத்துக்கு தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 10 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் விவசாயச் செய்கைக்காக பயன்படுத்தப்படும் உரத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்கு மிகவும் கட்டுப்பாட்டுடன் தமக்கு உரத்தை விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் உர விநியோக நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டின் விவசாயத்துறைக்கு அவசியமான உரத்தை இறக்குமதி செய்வதில் தாம் இடர்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், விவசாயத்துறையில் வெவ்வேறு மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படும் நிலையில், உரத்துக்கான கேள்வி பல்வேறு மட்டங்களில் அதிகரித்த வண்ணமுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உரத்துக்கு வரையறை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இறக்குமதி செய்யப்படும் உரத்தின் அளவைக் கொண்டு முழு நாட்டின் தேவையையும் நிவர்த்தி செய்ய முடியாத ஒரு நிலையை தாம் எதிர்நோக்கியுள்ளதாக குறித்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .