2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடல் பகுதியில் ஊடறுத்து நிறுவப்படவுள்ள புதிய நகர நிர்மாண பணிகளுக்கு வரி விலக்கு

A.P.Mathan   / 2014 ஜனவரி 28 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கடல் பகுதியில் ஊடறுத்து நிறுவப்படவுள்ள புதிய நகரத்துக்கான நிர்மாண பணிகளை முன்னெடுப்பதற்காக சீனாவின் நிறுவனமொன்றுக்கு இலங்கை அரசாங்கத்தின் மூலம் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கொழும்பு துறைமுக பகுதியை அண்மித்து காணப்படும் கடல் பரப்பில் 233 ஹெக்டெயர் பகுதி இவ்வாறு நகர நிர்மாண பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நகரொன்றை நிர்மாணித்து, அந்த பகுதியின் ஒரு பகுதியை இலங்கை துறைமுக முகவர் நிறுவனத்துக்கு சீனா வழங்கவுள்ளது.
 
இந்த நிர்மாண பணிகள் எட்டு வருடங்களுக்குள் இடம்பெறவுள்ளதுடன், 25 வருட காலப்பகுதிக்கான வரிவிலக்கை பெற்றுக் கொள்ளவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .