2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய சேமிப்பு வங்கியின் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கல்

Super User   / 2014 ஜனவரி 30 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


அம்பாறை மாவட்டத்தில் தேசத்திற்கு மகுடம் - 2014 இடம்பெற்ற காலப் பகுதியில் தேசிய சேமிப்பு வங்கியில் சேமிப்பு கணக்குகளை திறந்தவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் சீட்டிழுப்பு அண்மையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு தேசிய சேமிப்பு வங்கியின் அம்பாறை கிளையில் குறித்த வங்கியின் சந்தைப்படுத்தலுக்கு பொறுப்பான உதவி பொது முகாமையாளர் யூ.எல்.றபீக் தலைமையில் இடம்பெற்றது.

இந்த சீட்டிழுப்பில் தெரிவு செய்யப்பட்ட 17 பேருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இதில் முதல் பரிசாக கை உழவு இயந்திரமும் மூன்று தையல் இயந்திரங்களும் மூன்று நீர் இறைக்கும் பம்பிகளும் 10 துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன.

தேசத்திற்கு மகுடம் இடம்பெற்ற காலப்பகுதியில் அம்பாறை மாவட்ட மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த சீட்டிழுப்பு திட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சீட்டிழுப்பு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான சேமிப்பு கணக்குகள் அம்பாறை மாவட்டத்திலுள்ள தேசிய சேமிப்பு வங்கி கிளைகளில் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .