2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஹேலீஸ் லைட்டிங் முன்னெடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


'மின்சாரத்தை சேமியுங்கள், பணத்தை மிச்சப்படுத்துங்கள்' எனும் தலைப்பில், ஹேலீஸ் லைட்டிங் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கையேடு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கையேட்டில் மின்சாரத்தை எவ்வாறு மீதப்படுத்துவது தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த கையேடு அறிமுகம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. பொது மக்கள் மத்தியில் மின்சாரத்தை சிக்கனமான முறையில் பாவிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. எமது நாளாந்த வாழ்வில் நாம் மின்சாரத்தை பயன்படுத்தும் வழிமுறைகளை எவ்வாறு சிக்கனமாக முன்னெடுப்பது என்பது தொடர்பான குறிப்புகளை வழங்கும் வகையில் இந்த கையேட்டில் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
 
இந்த கையேட்டை உத்தியோகபூர்வமாக ஹேலீஸ் பிஎல்சியின் பணிப்பாளருமான சரத் கனேகொட அவர்களின் மூலம் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மின் மற்றும் வலு அமைச்சின் மேலதிக செயலாளர் உபாலி தரணகம அவர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.  
 
வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான அங்கமாக அமைந்துள்ளது. ஆதி காலம் முதல் இந்த முறையை பின்பற்றி வரப்படுகிறது. அதிகளவு மிச்சப்படுத்தும் பண்பை கொண்டவர்கள் வாழ்க்கையில் அதிகம் முன்னேற்றம் கண்டிருந்தனர். வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் இன்றைய காலகட்டத்தில் இது முற்றிலும் உண்மையான விடயமாக அமைந்துள்ளது. 
 
மின்சார கட்டணங்களில் அண்மையில் ஏற்பட்ட அதிகரிப்பு சேமிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இது மிகவும் கடினமான விடயமாகவும் அமைந்துள்ளது. சாமர்த்தியமாக சிந்தித்து செயலாற்றுவதன் மூலமாக சேமிப்பை மேம்படுத்த முடியும். வீட்டு செலவீனத்தின் பெரும்பாலான பகுதி மின்சார கட்டணத்துக்காக செலவிடப்படுகிறது. எனவே முதலாவது கட்டமாக சேமிப்பு என்பது மின்சாரக் கட்டணத்தை மிச்சப்படுத்துவதாக அமைந்துள்ளது. மின்சாரத்தை மீதப்படுத்துவது என்பது இருளில் இருப்பது என்பது அல்ல. குளிர்சாதனப் பெட்டிகளை அணைத்து வைப்பதோ, மின்அழுத்திகளை பயன்படுத்தாமல் இருப்பதோ என பொருள்படாது. சாதாரணமான முறையில் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு பல நுட்பமான வழிமுறைகள் உண்டு. இதன் மூலம் மின்சார அலகுகளை குறைத்துக் கொள்ள முடியும். சில இலகுவான வழிமுறைகள் மின்சார பட்டியலை குறிப்பிடத்தக்களவு குறைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
 
மின்சார கட்டணப்பட்டியலை குறைத்துக் கொள்வது என்பது பிரத்தியேக நிதி முகாமைத்துவத்துக்கு மட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல், சமூகத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. வலு வளங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாக அமைந்துள்ளன. விசேடமாக எரிபொருள் மற்றும் நீர் மின் போன்றன இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தியில் முறையே 63% மற்றும் 34% பங்களிப்பை வழங்குகின்றன. இதன் காரணமாக மின்சார உற்பத்தி என்பது அதிகம் செலவீனம் நிறைந்ததாக அமைந்துள்ளது. அண்மையில் அமுல்படுத்தப்பட்டிருந்த மின்கட்டண அதிகரிப்பானது, மக்கள் மத்தியில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், பலர் தமது பல மின்சாதனங்களை பாவனையை குறைத்துக் கொள்வதற்கு அடிப்படை காரணியாக அமைந்திருந்தது. பலரின் வாழ்க்கைத்தரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு விடயமாக இது அமைந்திருந்தது. 
 
மின்சார கட்டண பட்டியலை குறைந்தளவில் பேணுவதுடன், வலுவை சேமிப்பது என்பது எதிர்காலத்துக்கான தேவையாக அமைந்துள்ளது. எனவே மிகவும் சிக்கனமான முறையில் மின்சாரத்தை பயன்படுத்துவது என்பது தொடர்பில் அறிந்திருப்பது என்பது பிரத்தியேக சேமிப்பில் பெருமளவு பங்களிப்பை வழங்கக்கூடியது. இது தொடர்பில் ஹேலீஸ் லைட்டிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அப்துல் சுபைர் கருத்து தெரிவிக்கையில், 'இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு ஹேலீஸ் லைட்டிங் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதற்கமைய 'மின்சாரத்தை சேமியுங்கள், பணத்தை மிச்சப்படுத்துங்கள்' எனும் தலைப்பில் கையேடு ஒன்றை பொது மக்கள் மத்தியில் இலவசமாக விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த கையேட்டின் மூலம் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக, சுலபமான முறையில் பின்பற்றக்கூடிய பல முக்கிய விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது. பலர் இந்த சுலபமான முறைகள் பற்றி அறிந்திருப்பதில்லை. இந்த ஆலோசனைகளை நாளாந்தம் பின்பற்றுவதன் மூலம் பொது மக்கள் அதிகளவு சேமிப்பை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.
 
ஹேலீஸ் லைட்டிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், ஹேலீஸ் பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளருமான சரத் கனேகொட கருத்து தெரிவிக்கையில், 'பிலிப்ஸ் லைட்டிங் உடன் இணைந்து இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், 'பிலிப்ஸ் என்பது சர்வதேச வர்த்தக நாமமாகும். நுகர்வோரை மையப்படுத்தி சூழலுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இந்த பொருட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை சந்தோஷமாக முன்னெடுத்து செல்ல உதவியாக அமைந்துள்ளது. இந்த சர்வதேச நாமத்துடன், 1983ஆம் ஆண்டு முதல் இணைந்து ஹேலீஸ் இயங்கி வருகிறது. ஹேலீஸ் மற்றும் பிலிப்ஸ் ஆகியன இணைந்து நிலையான சமூக பொறுப்புணர்வு செய்திட்டம் தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த கையேடு இந்த சமூக பொறுப்புணர்வு செய்திட்டத்துக்கு பங்களிப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.
 
உலகளாவிய ரீதியில் காபன் வெளியீட்டை குறைப்பது தொடர்பாக காணப்படும் நவீன தரவுகளுக்கமைய வலுவை குறைக்கும் மின் குமிழ்களை பாவிப்பதற்கான வாய்ப்பை ஃபிலிப்ஸ் வழங்குகிறது. 2020ஆம் ஆண்டளவில் 2006ஆம் ஆண்டு ஒளியேற்றலுக்காக பயன்படுத்திய 30 வீதம் வரை குறைவாக காணப்படும் என ஃபிலிப்ஸ் எதிர்வு கூறியுள்ளது. இந்த குறைவானது காபனீரொட்சைட் அளவில் 515 மில்லியன் தொன் குறைவை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .