2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிளை அமைக்க நடவடிக்கை

Super User   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு நகரில் கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிளையொன்றை அமைப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என குறித்த வங்கியின் கிளிநொச்சி கிளை முகாமையாளர் ஜீ.சற்குணபாலன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிளிநொச்சி கிளையில் 500 இற்கும் மேற்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் கறைத்துறைப்பற்று பிரதேச செயலக்ததிற்குற்பட்ட முள்ளியவளை, முல்லைத்தீவு, குமுழமுனை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருனாட்டுக்கேணி ஆகிய பகுதிகளை சேர்ந்த பயனாளிகள் உள்ளனர்.\

இவர்களின் வங்கி நடவடிக்கைகளுக்காக நாம் ஒவ்வொரு மாதமும் இரு தடவைகள்  முல்லைத்தீவுக்கு வந்து வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும் இது மக்களுக்கு மிகவும் கஷ்டத்தை கொடுக்கிறது என்பதால் முல்லைத்தீவு நகரில் கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிளையொன்றை அமைப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ளேம்.

எனவே, முதலில் புதுக்குடியிருப்பில் வாடகைக் கட்டடமொன்றில் கிராமிய அபிவிருத்தி வங்கி கிளையொன்றை திறந்து வைத்து வங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதுடன் மிக விரையில் முல்லைத்தீவு நகரிலும் கிளையொன்றையும் திறக்கவுள்ளோம்.

முல்லைத்தீவு நகரில் கிராமிய அபிவிருத்தி வங்கியின் கிளையொன்றை அமைப்பதற்கு கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் காணி பிரிவு காணியினை வழங்கியுள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .