2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கறுவா பொதிகளில் சிங்க இலச்சினையை பயன்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்றுமதி நோக்கத்துக்காக தூய கறுவா உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து, தமது பொதிகளில் சிங்க இலச்சினையை பொறிப்பது தொடர்பான கோரிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கறுவா பொதிகளில், 'தூய இலங்கை கறுவா' எனும் நாமத்துடன், இலங்கையின் சிங்க இலச்சினையையும் பொறிப்பது தொடர்பில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து ஏற்றுமதியாளர்கள் முன் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சிங்க இலச்சினை பொறிக்கப்படும் பொதிகளில் 100 வீதம் தூய கறுவா இருப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த நடைமுறையை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை பின்பற்றுகிறது.

2020ஆம் ஆண்டளவில், கறுவா உள்ளிட்ட வாசனைத்திரவியங்களின் ஏற்றுமதியின் மூலமாக 1 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக திரட்ட இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .