2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஈராக்கிற்கு நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன: ரிஷாட்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈராக்குடனான வரலாற்று மற்றும் வர்த்தக ரீதியான எங்களது உறவு மிகப்பழமையானதும் வலிமையானதுமாகும். எமது முக்கிய சந்தைகளில் ஈராக் சந்தையும் ஒன்றாகும். உண்மையிலேயே தேயிலை மட்டுமின்றி வருங்காலத்தில் ஏனைய உற்பத்தி பொருட்களுக்கும் ஈராக் சந்தை முக்கியத்துவம் பெறும். இதேபோல், இலங்கையில் திறன் கொண்ட அதன் தயாரிப்புகளை ஊக்குவிக்க ஈராக்கிற்கு நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர ரிஷாட் பதியுதீன் கூறினார்.

பிப்ரவரி 25ஆம் திகதி பாக்தாத்தில் அமைந்துள்ள பலஸ்தீன் ஹோட்டலில் ஆரம்பமான இலங்கை- ஈராக் பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டுக் குழுவின் எட்டாவது கூட்டத்தொடரின் தனது ஆரம்ப உரையில் அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாக்தாத் கூட்டத்தில் ஈராக் அணியினை ஈராக் வர்த்தக அமைச்சர் கீர் அல்லாஹ் ஹாசன் பாபகர் முஹம்மது தலைமை தாங்கினார். ஈராக் அரசாங்கத்தின் 30 இற்கும் மேற்பட்ட உத்தியோகபூர்வ உறுப்பினர்கள், பிரதிநிதிகள், ஈராக்கிய அமைச்சுக்களிருந்து வர்த்தகம், பொருளாதார உறவுகள் அமைச்சர், போக்குவரத்து மற்றும் கைத்தொழில் மற்றும் கனிமங்கள் அமைச்சர்களும்  கலந்துகொண்டனர்.

இந்த அமர்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து குறிப்பிட்டதாவது:

ஈராக் - இலங்கை கூட்டு பொருளாதார ஆணைக்குழு 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து 2010 ஒக்டோபர் மாதம் வரை  ஏழு கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. ஒரு இதுவரை என்றுமில்லாத இரண்டு பங்காளி சம்பந்தப்பட்ட மிக பெரிய இருதரப்பு வர்த்தகம் முன்னெடுக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு நாடுகளுள் இலங்கையின் மிக பெரிய பங்காளி நாடுகளில் ஈராக்கும் ஒன்றாகும். கொழும்பில் வைத்து ஈராக் தூதுவர் கஹட்டான் தாஹா கலாப் சுட்டிக்காட்டப்பட்ட பாஸ்ரா கச்சா எண்ணெய் தொடர்பிலான பரிந்துரைகள் சுவாரசியமானதாக இருக்கின்றது. எனினும் இந்த பரிந்துரைகளுக்கான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு எங்களுக்கு சில ஆய்வு மேற்கொள்ளுவதற்கு தேவையுள்ளது. உங்கள் அணி  எங்களுடன் பாஸ்ரா கச்சா எண்ணெய் மற்றும் ஏனைய சலுகைகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ விவாதங்களை தொடங்க முடியும்.
 
ஈராக் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு வர்த்தக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டு உச்சத்தையடைதுள்ளது. இந்த மாபெரும் கூட்டு வர்த்தக நிகழ்வில் ஈராக்கும்  இலங்கையும் ஒரு புதிய சாதனையினை நோக்கி நகருவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 2012 ஆம் ஆண்டில் 8.72 மில்லியன்  அமரிக்க டொலர்களாக காணப்பட்டு அது 2013 ஆம் ஆண்டில் 89.99 மில்லியன்  அமெரிக்க டொலாக அதிகரித்து உச்சத்தை அடைந்துள்ளது. அதேபோல 2013 ஆண்;டில் இலங்கை ஈராக்கிற்கு 89,80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை மொத்தமாக ஏற்றுமதி செய்ததுடன் 0.19 மில்லியன் அமெரிக்க டொலர் பொருட்களை  ஈராக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

தேயிலையானது ஈராக்கிற்கான முக்கிய ஏற்றுமதியாக இருப்பதோடு மொத்த ஏற்றுமதியில் 95 சதவீதம் ஈராக்கிற் பங்களிக்கிறது. கிட்டத்தட்ட 15,000 தொன் தேயிலை மறைமுகமாக துபாய், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுடாக ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உரையினை தொடர்ந்து ஈராக் வர்த்தக அமைச்சர் கீர் அல்லாஹ் ஹாசன் பாபகர் முஹம்மது உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக ஈராக், OPECஇன் இரண்டாவது பெரிய எண்ணெய் வலு கொண்ட நாடாக இருக்கிறது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உணர்வு பூர்வ வரலாற்று இருதரப்பு ஒத்துழைப்பை பகிர்ந்து கொண்டமை மகிழ்சிக்குரிய விடயமாகும். இலங்கையில்  குறிப்பாக முதலீட்டு ஊக்குவிப்பு, சுதந்திர வர்த்தக வலயங்கள், நிதி மற்றும் சுகாதார துறைகள் ஆகியவற்றில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஈராக் ஆர்வமாகவுள்ளது என கீர் அல்லாஹ் ஹாசன் பாபகர் முஹம்மது தெரிவித்தார்.

மேற்படி இந்த கூட்டத்தொடரில் எங்கள் கூட்டு பொருளாதார ஆணைக்குழு தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் சாதக விளைவினை ஏற்படுத்தியுள்ளதுடன் இரு இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்புக்களினை ஆரம்பிப்பதற்கான அவசியத்தின் தேவை முன்வைக்கப்பட்டது.   

இலங்கையின் சுற்றுலாத்துறை  நன்கு வளர்சிசியடைந்துள்ளது. குறிப்பாக மருத்துவ சுற்றுலாத்தறையும் வளர்ச்சியுற்ற நிலையில் சுற்றுலாத்துறை பயணிகள் மத்தியில்  பிரசித்தியடைந்துள்ளது இது எமக்கு மகிழ்ச்சியை தருககின்றது.

மேலும்  ஆண்டுதோறும் 20 ஆயிரம் ஈராக்கியர் தங்கள் மருத்துவ தேவைகள் நிமித்தம் வெளிநாடு சென்று வருகின்றனர். அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து  உங்களது மருத்துவ சுற்றுலா வசதிகளினையயும் நன்மைகளினையும் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இலங்கைக்கு ஆகாயமார்கக்மாக பயணிப்பதற்கு ஆறு மணி நேர வசதியினை கொண்டிருக்கின்றோம். இலங்கை மருத்துவ சுற்றுலாவுக்கு குறைந்தது 10 சதவீத கழிவு வசதிகளுக்கான ஒத்துழைப்புகளுக்கு யோசனைகளை முன்வைக்கலாம். எமக்கு இலங்கையில் இருந்து நன்கு பயிற்சிபெற்ற மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் தேவை. எமது பணிகளுக்காக ஏற்கனவே சேர்ததுக்கொள்ளப்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு நாம் குறைந்தபட்ச மாதம் 2000- 4000 டொலர் வரையிலான நல்ல சம்பளம் உட்பட   அனைத்து வாழ்க்கை வசதிகள், உணவு மற்றும் டிக்கெட் வசதிகளை வழங்க தயாராக இருக்கிறோம் எனவும் பாபகர் முஹம்மது சுட்டிக்காட்டினார்.

ஒபெக்கின் இரண்டாவது பெரிய எண்ணெய் வலு நாடான ஈராக் இப்போது எண்ணெய் சுத்திகரிப்புக்காக இலங்கைக்கு பாஸ்ரா ரக கச்சா எண்ணெயினை வழங்க தயாராக இருக்கின்றது. கடந்த காலங்களில் இலங்கை எம்மிடமிருந்து எண்ணெயினை வாங்கி, சுத்திகரிப்பு செய்து வந்த செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. நீங்கள் எங்களுடைய பாஸ்ரா கச்சா எண்ணெயினை பெற்றுக்ககொள்ள முடியும். அவற்றை வழங்கவும் நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் ஈராக் இலங்கையில் இருந்து  'சிலோன் டீ' யினை பெற்றுக்கொள்ளும் முதன்மை  நாடாகும் என  நம்பிக்கையோடு இலங்கைக்கான ஈராக் தூதுவர் கஹட்டான் தாஹா காலாப்  கொழும்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .