2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிருமிகளுக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு குறித்து அறிந்திருக்கும் சிறந்த தாய்மார்கள்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 31 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


தாய்மார்கள் மற்றும் குடும்பத்தலைவிகள்; ஒவ்வொரு நாளும் தொடங்கியது முதல் தங்கள் வீடு முழுவதும் தூசுக்களை துடைத்தல், தொற்றுநீக்கிகளை பயன்படுத்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பல வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது.
சுகாதார துறையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் நம்பகமான முன்னோடியாகவும், உலகின் 1 இல் தர தொற்றுநீக்கி தரை தூய்மையாக்கியான லைசோல், அண்மையில் அதன் தூய்மையாக்கி தெரிவுகளை உள்நாட்டு சந்தையில் மீள் அறிமுகம் செய்திருந்தது.
 
குடும்பத்தினை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் மற்றும் சௌகரியமாகவும் வைத்திருப்பதில் லைசோல் அக்கறை காட்டி வருகிறது. லைசோல் தரை தூய்மையாக்கியானது, ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தாத ஃபினைல் போன்ற சாதாரண தூய்மையாக்கிகளை விட 10 மடங்கு வேகமாக தொழிற்படும் சக்திமிக்க தூய்மையாக்கும் உற்பத்தியாக விளங்குகிறது.
 
தரை தூய்மையாக்கியின் சிறந்த தூய்மைப்படுத்தும் செயல்முறையானது 60 நொடிக்கும் குறைவான காலப்பகுதியில் 99.9% வீதமான கிருமிகளை அழித்து தாய்மார்களுக்கு மனநிம்மதியை அளிக்கிறது. இது கடினமான கறைகளை அகற்றி புத்துணர்ச்சியான, தூய்மையான மற்றும் நீடித்த இயற்கை நறுமணத்தை பரவச் செய்கிறது. 
 
பொதுவாக சமையலறை மற்றும் குளியலறை தரைகளிலேயே கிருமிகள் அதிகமாக பரவுகின்றன. கிருமிகள் பொதுவாக ஈரமான மற்றும் அழுக்கு படிந்த தரைகளையே அதிகம் விரும்புகின்றன. ஃபினைல் போன்ற தூய்மையாக்கிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு தரையை சுத்தமாக்கினாலும், அவை வீடு முழுவதும் கடுமையான மணத்தை பரப்பச் செய்கிறது.
 
'நீண்டகாலத்திற்கு ஆரோக்கியமான வீடுகளை பராமரிப்பதற்கு நம்பிக்கைக்குரிய தூய்மையாக்கியை தேடிய நுகர்வோருக்கு புத்துருவாக்கமான தொற்றுநீக்கி பல்நோக்கு தூய்மையாக்கியை அறிமுகம் செய்துள்ளமை குறித்து நாம் பெருமையடைகிறோம். லைசோல் சுத்தம் செய்வதையும் தாண்டி, கடுமையான இரசாயன எச்சங்களை விட்டு வைக்காது சக்திமிக்க தூய்மை மேற்கொள்வதற்கு குடும்பங்களுக்கு உதவுவதை உறுதி செய்கிறது. இது கடுமையான கறைகளை நீக்கி தரையை கறைகளின்றியும், கிருமிகள் அற்றதாகவும் மாற்றுகிறது. டைல் தூய்மையாக்கியானது ஃளோரல், பைன், லெவண்டர் மற்றும் சிட்ரஸ் போன்ற இயற்கை நறுமணங்களில் விற்பனை செய்யப்படுகின்றன' என ரெக்கிட் பென்கீசர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வர்த்தக பணிப்பாளர் சிங்க்ளெயர் க்ரூஸ் தெரிவித்தார்.
 
குடும்பத்தை பாதுகாத்தல், சிறந்த சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுதல் போன்ற தாய்மார்களின் பொறுப்புகளை லைசோல் நன்குணர்ந்துள்ளது. வேலைக்குச் செல்லும் தாய்மாருக்கு, தங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் குடும்பத்தினருடன் நியாயமான நேரத்தை செலவிடுவதற்கு மிகச்சிறந்த சமநிலை தேவைப்படுகிறது. தொடர்ச்சியான புத்தாக்க மெருகேற்றல்கள் மூலம் இந்த உற்பத்தி சிறந்த தூய்மையை ஏற்படுத்தி குடும்பத்தலைவிகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சுகாதார நடைமுறைகளை பேண உதவுவதாக அமையும்.
 
அறிமுக நிகழ்வில் லைசோல் இன் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் ருச்சிர மணி கருத்து தெரிவிக்கையில், 'வர்த்தகநாமம் எனும் ரீதியில், தனது குடும்பத்தை ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுதல் தாய்மார்களின் முன்னுரிமை என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். வீட்டின் ஒட்டுமொத்தமான சுகாதாரத்தை மேம்படுத்தி தாய்மாருக்கு உதவிடும் வகையில் லைசோல் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
 
சந்தோஷமான மற்றும் குறைந்த நேரத்தை செலவிடும் தினசரி சுத்தப்படுத்தலானது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியான குடும்பங்களை நோக்கி வழிநடத்துகிறது.
 
தாய்மாருக்கு அருமையான குறிப்புகள்:
சுத்தப்படுத்தலை மகிழ்ச்சியாக்கக் கூடிய சுத்தமாக்கும் கருவிகள் மற்றும் பொருட்களில் முதலீடு செய்யுங்கள் - வர்ணமயமான சுத்தம் செய்யும் வாளிகள், தூசு துடைக்கும் துண்டுகள் மற்றும் டவல்களை தெரிவு செய்யவும். இது உங்கள் தினசரி சுத்தப்படுத்தும் முறையை ஊக்குவிப்பதாக அமையும். 
சுத்தம் செய்யும் போது இசையை கேட்கலாம். உங்களுக்கு விருப்பமான பாடல்களை செவிமடுக்கும் போது நீங்கள் சுத்தம் செய்வதை மறந்து அலுப்பின்றி பணி புரியலாம். 
உங்கள் கருவிகளை ஒன்றாக வையுங்கள் - உங்கள் பொருட்களை ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு கொண்டு செல்ல சுத்தம் செய்யும் பெட்டியை பயன்படுத்தவும். அதனுள் சுத்தம் செய்யும் துணிகள், wipes, தூய்மைபடுத்திகள் மற்றும் ஏனைய தேவையான பொருட்களை சேமித்து வைக்கலாம்.
சுத்தம் செய்தலை விளையாட்டாக உருவாக்கல் - நீங்கள் அறையினை சுத்தப்படுத்த நுழையும் போது, அதனை சுத்தமாக்குவதற்கு எவ்வளவு நேரம் செலவாகும் என்பதையும், அதற்குரிய நேரத்தையும் கணிப்பிட்டு வைத்துக் கொள்ளலாம். நேரம் முடிவடைய முன்னர் வேலையை முடிக்க பார்க்கலாம்! 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X