2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஹார்பிக் 'சனிபாரக்ஷக சேவாவ' திட்டம்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 23 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLIM நீல்சன் மக்கள் விருதுகள் வழங்கும் விழாவில் வருடத்திற்கான சிறந்த FMCG வீட்டு பராமரிப்பு வர்த்தகநாமமாக கௌரவிக்கப்பட்ட ஹார்பிக் ஆனது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பல்வேறு சமய திருவிழாக்களில் மில்லியன் கணக்கான இலங்கையருக்கு நடமாடும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்ததுடன், ஆயிரக்கணக்கான கிராமிய இலங்களில் முறையான கழிப்பறை தூய்மை மற்றும் சுகாதார பழக்கங்கள் குறித்த விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஹார்பிக்கின் CSR திட்டமான 'சனிபாரக்ஷக சேவாவ'(சுகாதாரச் சேவைகள்) மூலம் நாடுமுழுவதும் இடம்பெறும் சமய திருவிழாக்களில் பங்குகொள்ளும் பார்வையாளர்களுக்கு சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. நடமாடும் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சேவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கழிவறைச் சூழலை வழங்கும் வகையில் இந்த நடமாடும் கழிப்பறைகள் ஹார்பிக் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் வெசாக் காலத்தில் கங்காராம தேவாலயத்திற்கு விஜயம் செய்த சுமார் 200,000 பக்தர்களுக்கு தேவையான சுகாதார தீர்வுகளை ஹார்பிக் வழங்கியிருந்தது. பொசன் புனித யாத்திரை காலப்பகுதியில் மிகிந்தலையில் அமைக்கப்பட்டிருந்த முழுமையான நடமாடும் கழிவறைகள் மூலம் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் அனுகூலங்களை பெற்றிருந்தனர். அதேவேளை ஜுலை முதல் ஓகஸ்ட் மாதம் வரை இடம்பெற்ற கண்டி எசெல மஹா பெரஹெரவில் கலந்துகொண்ட சுமார் 3 மில்லியன் மக்களுக்கு ஹார்பிக் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. மேலும் அனுராதபுர ஆலய திருவிழாவில் பங்குபற்றிய 600,000 பக்தர்களுக்கு பாதுகாப்பான, சுகாதார வசதிகளை ஹார்பிக் வழங்கியிருந்தது.

'இலங்கையின் முதல் தர கழிவறை தூய்மையாக்கியான ஹார்பிக் வர்த்தகநாமமானது இந்த வருடம் வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய, வட மத்திய, வட மேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் வீடு வீடாகச் சென்று கழிவறை தூய்மைப்படுத்தல் தொடர்பில் விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுத்திருந்தது. கழிப்பறையின் சுகாதாரத்தை பராமரிப்பதற்கு ஹார்பிக் பயன்பாட்டின் அனுகூலங்கள் தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகளை ப்ளு ஹார்பிக் குழுவிலுள்ள 6 உறுப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்' என சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் ருச்சிர மணி தெரிவித்தார்.

'ஹார்பிக் வர்த்தகநாமமானது கழிப்பறை தூய்மைப்படுத்தலுடன் தொடர்புடையது. இலங்கையை வாழ்;வதற்கேற்ற சுகாதாரமான இடமாக மாற்றுவது ஹார்பிக் வர்த்தகநாமத்தின் உறுதிமொழியாகும். பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஒன்றுகூடும் இடத்தில் அனைவருக்கும் தூய்மையான சுகாதார வசதிகளை வழங்குவது என்பது பிரச்சனைக்குரிய விடயமாகும்.
இந்த தேவையை நன்குணர்ந்துள்ள ஹார்பிக் ஆனது, பெரியளவிலான சமய மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அதன் 'சனிபாரக்ஷக சேவாவ' திட்டத்தின் ஊடாக தூய மற்றும் பாதுகாப்பான துப்புரவு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. புத்த சாசன மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் ஆசிர்வாதத்துடன் இந்த முயற்சியில் பங்கு கொள்வதையிட்டு ஹார்பிக் மிக்க மகிழ்ச்சியடைகிறது' என ரெக்கிட் பென்கீசர் நிறுவனத்தின் வர்த்தக பணிப்பாளர் சின்க்ளேர் க்ரூஸ் தெரிவித்தார்.

ஹார்பிக் உற்பத்தி தெரிவுகளில் புதிதாக ஹார்பிக் அல்ட்ரா எனும் தயாரிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. ஹார்பிக் தெரிவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த கழிவறை துய்மையாக்கியாக இத் தயாரிப்பு அமைந்துள்ளது. ஹார்பிக் அல்ட்ராவின் மேம்படுத்தப்பட்ட திட சேர்மானமானது, கழிப்பறை தொட்டியில் காணப்படும் கிருமிகள், ஒட்டியிருக்கும் அழுக்குகளை அழிப்பதுடன், கடுமையான கறைகளையும் அகற்றுகிறது. இது நீர்மட்டத்திற்கு மேலேயும், கீழேயும் கழிவுத்தொட்டியை மிகத் தூய்மையாக வைக்கச் செய்கிறது. நீருடன் ஒன்றுசேரும் போது ஏற்படும் நிறமாற்றமானது ஹார்பிக் அல்ட்ராவின் வினைத்திறனுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X