Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வணிக ரீதியான வனவளர்ப்பு தொடர்பான கேள்வி உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், அகர்வூட்டிற்கான பெறுமதி US$ 6 - 8 பில்லியன் வரை அதிகரித்துள்ளது. அகர்வூட் பிசின்கள் எகியுலேரியா மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதுடன், அவை உலகத்தரம் வாய்ந்த வாசணைத் திரவியங்கள், பாரம்பரிய மருந்துகள், ஊதுபத்திகள், அரோமா சிகிச்சை மற்றும் அழகுசாதனங்கள் போன்றவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையின் முன்னணி வணிக ரீதியான வனவளர்ப்பு நிறுவனமான சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட் வனவளர்ப்பு முதலீடுகள் மற்றும் அகர்வூட் முதலீட்டாளர் திட்டங்களை வழங்கி வருகிறது. 'அகர்வூட்டினை வணிக ரீதியான வனவளர்ப்பு முதலீடாக அறிமுகம் செய்த முன்னணி நிறுவனம் சதாஹரித ஆகும்' என சதாஹரித நிறுவனத்தின் தலைவர் சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.
இதன் அதிக கேள்வி காரணமாக பல்வேறு நபர்கள் மற்றும் குழுக்கள் குறுகிய வழியில் இத்துறையில் நுழைய முயற்சி எடுத்து வருவதனால் அகர்வூட்டில் முதலீடுகளை மேற்கொள்ள முன்னர் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
'நாம் வணிக ரீதியான வனவளர்ப்பு துறையில் 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளோம். தேசிய ஆராய்ச்சி சபை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியாவின் கர்டன் பல்கலைக்கழகம் மற்றும் வெஸ்கோப் சர்வதேச சந்தை ஆராய்ச்சி நிலையம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, அகர்வுட் ஆராய்ச்சி தொடர்பில் முதலீடுகளை சதாஹரித மேற்கொண்டு வருகிறது. ஆகவே, இது வெறுமனே ஒரு சிறிய மரக்கன்றினை கொள்வனவு செய்தல் அல்லது சில விதைகளை இறக்குமதி செய்து சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வது போன்ற சாதாரண விடயமல்ல என்பதை காட்டுகிறது' என தலைவர் சதீஷ் தெரிவித்தார்.
அகர்வூட் மரங்களிலிருந்து பெறுபேறுகளை பெறுவதற்கு 6 - 7 ஆண்டுகள் செலவாகும் என்பதால், தமது பணம் மற்றும் முயற்சியை முதலீடு செய்வதற்கு முன்னர் முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் குறித்து நவரத்ன விளக்கினார்.
'நாம் ஆரோக்கியமான தாய் மரங்களிலிருந்து பெறப்படும் விதைகளை இறக்குமதி செய்கிறோம். நாம் மரங்களின் மரபுவழி தொடர்பான சான்றுகள், விழிப்புணர்வு மற்றும் அறிவினை கொண்டுள்ளோம். மேலும் நாம் முதலீட்டாளர்களின் சொந்த நிலத்திற்கே மரக்கன்றுகளை கொண்டு செல்வதுடன், திணைக்கள அதிகாரிகள் மூலம் கண்காணிப்புகள் மற்றும் தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஏனைய நிறுவனங்கள் மரக்கன்றுகளை மாத்திரம் நேரடியாக விற்பனை செய்வதை தவிர்த்து, வேறெந்த சேவைகளையும் வழங்குவதில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.
வணிக ரீதியான அகர்வுட் உற்பத்திக்கு இலங்கையில் CA Kit ஊடாக மாத்திரமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த முறைக்கான பிரத்தியேக காப்புரிமையை இலங்கையில் சதாஹரித பிளாண்டேஷன் மட்டுமே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, உயர்தரம் வாய்ந்த கன்றுகளை இறக்குமதி செய்தல், CA Kit தொழில்நுட்பத்தை இந்நாட்டில் பயன்படுத்துவதற்கான பூரண அனுமதி, தொடர்ந்து பல்வேறு நபர்களுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேவையான அறிவுரைகளை வழங்குதல் ஆகியவற்றின் ஊடாக முதலீட்டின் நம்பகத்தன்மையை பேணுவதற்காக மிகப்பெரிய பணத்தினை செலவிட வேண்டியிருப்பதாகவும், இதனால் நிறுவனம் ஒரு மரக்கன்றை விற்பனை செய்யும் விலையை விடவும் குறைந்த விலையில் மரக்கன்றுகளை விற்பனை செய்வது சாத்தியமில்லை எனவும் சதாஹரித நிறுவனம் சுட்டிக்காட்டியது.
'நாம் மரக்கன்று ஒன்றினை ரூ.1400 க்கு விற்பனை செய்கிறோம். அதே மரக்கன்றினை ரூ.300 க்கு எவரேனும் விற்பனை செய்வாராயின், முதலீட்டாளர் எவ்வித யோசனையுமின்றி அதில் முதலீட்டினை மேற்கொள்வார். ஆனால், சரியான தொழில்நுட்ப வழிமுறை மற்றும் முறையான தொழில்நுட்பமின்றி இந்த முறையில் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற முடியாது என்பதை உணர முதலீட்டாளர்களுக்கு பல ஆண்டுகள் செலவாகும்' என நவரத்ன குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 'இந்நாட்டிலுள்ள சில நிறுவனங்கள் வனவளர்ப்பு துறையில் நிச்சயமான பெறுபேறுகளை வழங்கக்கூடிய தொழில்நுட்பத்தையும், அகர்வுட் உற்பத்திக்கான patent உத்தரவாதத்தை கொண்டிருப்பதில்லை எனவும் குறிப்பிட்டதுடன், patent உத்தரவாதத்தை கொண்ட இலங்கையின் ஒரேயொரு நிறுவனம் சதாஹரித ஆகும் எனவும் தெரிவித்தார். 'ஆகவே, அத்தகைய உத்தரவாதமல்லாத நிறுவனங்களுடன் முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் வாடிக்கையாளரே அதிகம் பாதிக்கப்படுவார். இத்துறையில் சரியாக தொழில்நுட்பத்தை கொண்டுள்ள முன்னணி நிறுவனம் சதாஹரித ஆகும். முதலீடுகளின் ஊடாக நிச்சயமாக பெறுபேறுகளை வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை எம்மால் மாத்திரமே வழங்க முடியும். உங்கள் பணத்தை சிறந்த வழியில் முதலீடு செய்ய விரும்பினால் இன்றே எம்மை தொடர்பு கொள்ளவும்' என தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
20 Sep 2025