2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். ரயில் நிலையத்தில் 'மொபிட்டல் சேவை'

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இன்று புதன்கிழமை (25), மொபிட்டல் சேவை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது.

இதன்மூலம், 365 என்ற மொபிட்டல் சேவையுடன் தொடர்பு கொண்டு யாழ்ப்பாணம் - கொழும்பு உட்பட அனைத்து ரயில் நிலையங்களுக்கான பயண முற்பதிவுகளை செய்யலாம்.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பி.ஜி.குமாரசிங்க, பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் ஜி.ரூபசிங்க, மொபிட்டல் சிரேஸ்ட முகாமையாளர் சந்திக விதாரண, யாழ். சேவை நிலைய முகாமையாளர் விஜய அமரதுங்க ஆகியோர் இந்த சேவை நிறைய திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X