Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 10 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலா தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் பேருந்து ஒன்றின் மீது 1.5 மில்லியன் ரூபாய் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக திறைசேரி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முன்னர் இந்த தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படும் பேருந்துகளுக்கு வரி ஏதும் அறவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாவித்த பேருந்துகளை இறக்குமதி செய்வோருக்கு சுமார் 10 வருட காலம் வரை பாவித்த பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் சுமார் 10 ஆண்டுகள் வரை பாவித்த பேருந்துகள் சுற்றுலா பயன்பாட்டுக்கு ஈடுபடுத்த முடியாது எனும் நிலைப்பாட்டை பேருந்து இறக்குமதியாளர்கள் கொண்டுள்ளனர்.
"இந்த வகையான பேருந்துகள் சூழலை பெரிதும் மாசுபடுத்தும் என்பதுடன், பராமரிப்பதற்கான செலவீனமும் அதிகளவில் காணப்படும். சுமார் 5 வருடங்களுக்கு மேலாக சுற்றுலா தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பேருந்துகளை நாம் தடை செய்ய வேண்டும்” என இறக்குமதியாளர் சார்பில் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
27 minute ago
39 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
39 minute ago
8 hours ago