2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அலைபேசி சந்தையில் பிரவேசிக்கும் Intex டெக்னொலஜிஸ்

A.P.Mathan   / 2015 மார்ச் 13 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் கையடக்க தொலைபேசி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனமான Intex டெக்னொலஜிஸ், 19 வருட காலமாக தொழில்நுட்பத்தில் புத்தமைவாளர்களாக திகழ்வதுடன், இலங்கையில் தமது நடவடிக்கைகளை விஸ்தரிக்கவும்   திட்டமிட்டுள்ளது.

'இலங்கையின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையை பொறுத்தமட்டில் அதிகளவு சந்தை வாய்ப்பு காணப்படுகின்றனது. கடந்த ஒரு வருட காலத்தில் இந்த துறை சடுதியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதை நாம் அவதானித்திருந்தோம். எனவே இது ஒரு சிறந்த வாய்ப்புள்ள துறையாகும்' என Intex டெக்னொலஜிஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் கேஷவ் பன்சால் கருத்து தெரிவித்தார். 

இலங்கையில் தமது சேவைகளை விஸ்தரிப்பது தொடர்பிலும் தமது சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் விரிவாக்கல் தொடர்பிலும் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 'இலங்கையில் அடுத்த 6 – 8 மாத காலப்பகுதியில் 360 பாகை சந்தைப்படுத்தல் திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் இலங்கையின் நுகர்வோர்கள் மத்தியில் வர்த்தக நாமம் தொடர்பிலான நிலைப்பாடு வர்த்தக நாமத்தின் ஏற்றுக் கொள்வனவு தன்மையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார்.

'இலங்கையர்களின் தேவைகள் குறித்து நாம் நன்கு அறிந்துள்ளோம். எனவே, இவர்கள் அனைவருடனும் நாம் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக, போட்டிகரத்தன்மை வாய்ந்த தயாரிப்புகளை அறிமுகம் செய்வதால் ஏனையவர்களுடன் ஒப்பிடுகையில் எமக்கு அதிகளவு வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்' என்றார்.

இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமங்களில்; கடந்த காலாண்டில் (ஒக்டோபர் – டிசம்பர் 2014) 3ஆம் நிலையிலிருந்ததுடன், ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் முதலாமிடத்தையும் பெற்றிருந்தது. தற்போதைய சந்தையில் சிறந்த விலையில் புத்தமைவான தயாரிப்புகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 

அவர்களின் Matrabhasha ஆப்ளிகேஷன் மூலமாக 22 மொழிகளில் (இந்திய) வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை பேணும் வகையில் அமைந்துள்ளதுடன், சிங்கள மொழியையும் உள்ளடக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகவும் சகாயமான ஸ்மார்ட்ஃபோன் வகையான Cloud FXஐ Mozilla உடன் இணைந்து Intex அறிமுகம் செய்திருந்தது.

இலங்கையில் 2013 ஆம் ஆண்டு பிரவேசித்திருந்த Intex, இன்றைய காலகட்டத்தில் உள்நாட்டு மொபைல் கையடக்க தொலைபேசி சந்தையில் 7% தன்னகத்தே கொண்டுள்ளதுடன், சந்தை வாய்ப்பில் 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 

பன்சால் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 'இலங்கையை பொறுத்தமட்டில், நாம் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் சகாயமான விலையில் இலங்கையர்களுக்கு புதிய அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்' என்றார்.

உள்நாட்டு தேவைகளுக்கு அமைவாக கையடக்க தொலைபேசிகளை வடிவமைத்து எதிர்வரும் 6 – 8 மாத காலப்பகுதியில் விநியோகங்களை மேற்கொள்வது கம்பனியின் நோக்கமாக அமைந்துள்ளது.  இதில் புதிய ஸ்மார்ட்ஃபோன் வகைகள், slim மற்றும் curvy வடிவமைப்பு, பெரிய பற்றரி வடிவமைப்பை கொண்ட கையடக்க தொலைபேசிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட RAM/ROM போன்றவற்றை கொண்டுள்ளன. 

70 க்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்பாடுகளைக் கொண்ட Intex டெக்னொலஜிஸ், ஸ்மார்ட்ஃபோன்கள் விற்பனையில் போட்டிகரமான நிலையை கொண்டுள்ளது. பன்சால் தொடர்ந்து விபரிக்கையில், 'ஏனைய வர்த்தக நாமங்களுடன் ஒப்பிடுகையில் நாம் அதிகளவு மேம்படுத்தல்களை கொண்டுள்ளோம். எமது பங்காண்மைகள், எமது புத்தமைவுகள் மற்றும் தரம் போன்றன Intex தயாரிப்புகளை வேறுபடுத்தி காண்பிக்கின்றன. இலங்கையை சந்தையை நன்கு உணர்ந்த அணியுடன் நாம் கைகோர்த்துள்ளோம். சிங்கர் உடனான பங்காண்மை இதில் அடங்கியுள்ளது' என்றார்.

 'சிங்கருடன் கைகோர்த்துள்ளதன் மூலமாக எமக்கு பெருமளவு அனுகூலங்கள் கிட்டியுள்ளன. இலங்கையில் காணப்படும் மிகவும் புகழ்பெற்ற நாமமாக இது திகழ்கிறது. அவர்களின் விநியோக வலையமைப்பு, விற்பனைக்கு பிந்திய வலையமைப்பு, அவர்களின் செயலணி போன்றவற்றுடன் நிதி உறுதித்தன்மை போன்றனவும் உறுதியாக காணப்படுகின்றன' என பன்சால் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X