Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மார்ச் 13 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹேமாஸ் குழுமத்தின் பிரபல்யமான கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (CSR) முன்னெடுப்பாக திகழும் 'பியவற' ஆனது JASTECA CSR 2014 விருதுகள் நிகழ்வின்போது, ஒட்டுமொத்த தங்க விருதை (Overall Gold Award) வெற்றி கொண்டுள்ளது.
கொழும்பு கலதாரி ஹோட்டலில் பிரமாண்டமாக இடம்பெற்ற விருது வழங்கல் நிகழ்வின் போது, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மேன்மைதங்கிய நபுஹிடோ ஹொபோ அவர்களிடம் இருந்து ஹேமாஸ் அவுட்றீச் பவுண்டேசனின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஷிரோமி மசக்கொரள இவ்விருதைப் பெற்றுக் கொண்டார்.
ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட JASTECA விருது வழங்கலானது, அரச மற்றும் தனியார் வர்;த்தக நிறுவனங்கள் தமது வியாபார கொள்கையின் ஒரு அங்கமாக கூட்டாண்மை சமூகப் பொறுப்பை (CSR) கடைப்பிடிக்க மற்றும் உள்வாங்கிக் கொள்ளச் செய்வதற்கு ஊக்கமளிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாக காணப்படுகின்றது. இது, சட்ட ரீதியான மற்றும் நிறுவனத்துடன் தொடர்புபட்ட பங்குதாரர்களின் கடப்பாடுகளுக்கும் அப்பால் செல்லும் அதேவேளை, அவர்களது முன்முயற்சிகளுக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் அவர்களை அங்கீகரித்து, வெகுமதி அளிப்பதாக அமைகின்றது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி முன்னெடுப்பு திட்டமாக திகழும் பியவற ஊடாக, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனம் இலங்கை சிறுவர்களுக்கு வழங்கிவரும் முன்னோடி சேவையினை அங்கீகரித்து பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டிருக்கின்றது.
மூன்று மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் இடம்பெற்ற மதிப்புமிக்க 'ஆசிய நிறுவன சிறப்புத்துவம் மற்றும் நிலைபேண்தன்மை விருதுகள் - 2014' (ACES) நிகழ்வின்போது பியவற ஆனது, இரு பிரிவுகளின் கீழ் ஒட்டுமொத்த வெற்றியாளராக விருது பெற்றது. அதன்படி இந்நிகழ்வில் 'ஆசியாவின் அதி உயரிய சமூகப் பொறுப்புள்ள நிறுவனம் - 2014' மற்றும் 'ஆண்டின் மிகச்சிறந்த நிறுவன சமூகப் பொறுப்புப் பிரசாரம்' ஆகிய விருதைகளையே பியவற பெற்றுக் கொண்டது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, இந்தியா, ஹொங்கொங் மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் இந்த விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்த நிலையிலேயே பியவற இவ்விரு விருதுகளையும் தனதாக்கியது.
13 வருடங்களுக்கு முன்னர் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட பியவற முன்னெடுப்பானது ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் முதன்மையான கூட்டாண்மை சமூகப் பொறுப்பு செயற்றிட்டமாக திகழ்கின்றது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் பங்காளித்துவத்துடன் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாடு முழுவதும் சிறுவர் நட்புறவுமிக்க முன்பள்ளிப் பாடசாலைகளை நிறுவுவதன் ஊடாக முன்பிள்ளைப் பருவ கவனிப்பு மற்றும் அபிவிருத்தியை (ECCD) ஊக்குவிப்பதை மையமாகக் கொண்டதொரு முழுமையான அணுகுமுறையை இச்செயற்றிட்டம் கொண்டிருக்கின்றது.
பியவற செயற்றிட்டம் கடந்த காலங்களில் பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகளை வென்றுள்ளது. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான 'வெற்றிகரமான ஆரம்பக் கல்விக்கு அடித்தளம் இடுவதனூடாக உலகளாவிய ஆரம்பக் கல்வியை அடைந்து கொள்தல்' என்பதற்கு அமைவானதாகவும் காணப்படுகின்றது. பியவர ஆனது குழந்தைப் பருவத்தை கடந்து முன்பிள்ளைப் பருவத்திற்குச் சென்று, சிறுவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கின்ற கற்றலுக்கு அவசியமான உறுதிமிக்க ஒரு அடித்தளத்தை அடைந்து கொள்வதற்கு உதவி புரிகின்றது.
'சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகம் உள்ளடங்கலாக பியவற செயற்றிட்டத்துடன் தொடர்புபட்ட முக்கிய பங்குதாரர்களுடன் ஒன்றிணைந்து இச் செயற்றிட்டத்தை மீள் மதிப்பீடு செய்யும் பணிகளில் நாம் இப்போது ஈடுபட்டிருக்கின்றோம். இந்த முன்னெடுப்பு திட்டத்தை அடுத்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் இந்த நாட்டில் உள்ள சிறுவர்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்காகவுமே இந்த மீள் மதிப்பீட்டை மேற்கொள்கின்றோம்' என்று ஹேமாஸ் அவுட்றீச் பவுண்டேசன் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஷிரோமி மசக்கொரள தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி கூட்டுநிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கின்ற ஹேமாஸ் குழுமமானது FMCG, சுகாதார பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் விடுமுறைகால ஏற்பாடுகள் போன்ற முக்கியமான நான்கு துறைகளை மையமாகக் கொண்டு வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது.
26 minute ago
38 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
8 hours ago