2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாற்றமடைந்து வரும் உலகைப்பற்றி அறிந்து கொள்வதுடன் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்: சீதா குமார்

A.P.Mathan   / 2015 மே 03 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

Pearson தகைமைகள் இன்டர்நஷனல் நிறுவனத்தின் உப தலைவர் சீதா குமார் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது, தற்போதைய கல்வி போக்குகள், இலங்கையில் காணப்படும் சந்தை வாய்ப்புகள் மற்றும் புதிய நிலையில் காணப்படும் வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கமளித்திருந்தார்.

Pearson தகைமைகள் இன்டர்நஷனல் நிறுவனத்தின் உப தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சீதா குமார், சர்வதேச தகைமைகள் தொடர்பில் தாம் அதிகளவு கவனம் செலுத்துவதாகவும், உயர் தரங்களை பேணுவதன் மூலமாக தொடர்ச்சியாக பயிலுநரின் மனநிலையை எவ்வாறு முன்னேற்றுவது என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. தரம் பற்றிய நிலையிலிருந்து, ஒழுங்குபடுத்தல் தரங்கள் பற்றிய பிரித்தானிய கொள்கைகளுடன் நாம் இணைந்துள்ளோம்.  

BBC இன் பத்திரிகையாளராக இதற்கு முன்னர் பணியாற்றியுள்ள சீதா குமார், தமக்கு மிகவும் ஆச்சரியமூட்டும் விடயங்களை செய்வதில் அதிக ஆர்வத்தை கொண்டுள்ளார். அங்கு பணியாற்றிய காலப்பகுதியில் கேட்போர் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததை உணர்ந்ததுடன், அது போன்றதொரு அனுபவத்தை வழங்கக்கூடிய மற்றுமொரு துறையை தேடிய போது, Pearsonஐ தெரிவு செய்திருந்தார். 

Pearson இல் பணிபுரிபவர்களுடன் கலந்துரையாடி, அவர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்து அதற்கமைய  எதிர்காலத்தில் தாம் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொழில்நிலையை பொறுத்தமட்டில் நாம் இயங்கும் சந்தையில் மாற்றங்கள் காணப்படுவதால் நாம் வௌ;வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உணர்கிறேன். வெவ்வேறு நாடுகளில் காணப்படும் சூழ்நிலைகள் மாற்றமடைந்த வண்ணமுள்ளன. குறிப்பாக கல்வி முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன. எதிர்மறையான சவாலாக தாம் இதை கருதவில்லை எனவும், இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

கல்வி துறையை பொறுத்தமட்டில், பெருமளவானோர் தற்போது பட்டம் பெற்றுள்ள போதிலும், தொழில் ஒன்றை தேடிக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். உதாரணமாக, கூட்டாண்மை நிறுவனங்கள் தமக்கு அவசியமான ஆளுமைகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே மாற்றமடைந்து வரும் உலகில் தொழில் வாய்ப்பு மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் ஆளுமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும், மிக முக்கியமாக, பாடசாலை மட்டத்திலிருந்தே பிள்ளைகளுக்கு தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என கருதுகிறேன்.  

கல்வி முறை என்பது தற்போது கல்வி என்பதிலிருந்து அப்பால் சென்று, நடைமுறை சாத்தியமான ஆளுமை அடிப்படையிலான கல்வி முறைக்கமைவாக உள்ளதா என்பதை பற்றி கவனிக்கும் போது, கல்வி முறையில் இரு பிரிவுகள் காணப்படுகின்றன. மக்களின் சிந்தனை திறனை ஊக்குவித்து வாசிப்பு மற்றும் உள்வாங்கும் திறனை ஊக்குவிப்பதற்கு கல்வி அவசியமாகிறது. மற்றைய விடயம் என்பது தொழில் வாய்ப்பு என்பதை பொறுத்து நடைமுறை சாத்தியம் என்பதாக அமைந்துள்ளது. நடைமுறை சாத்தியமான விடயங்களுக்கு Pearson முக்கியத்துவம் வழங்குவதுடன், இதற்காக BTEC மற்றும் LCCI ஆகிய தகைமைகளை கொண்டுள்ளது. 

இலங்கையை பொறுத்தமட்டில் கல்விமான்களுக்கு சிறந்த பெறுமதி காணப்படுவதாக நினைக்கிறேன். தொழில் வாய்ப்பை பற்றி கருத்தில் கொள்ளும் போது, மேலதிக தகைமைகளை வழங்க முடியும் என கருதுகிறேன். இதன் மூலம் ஆசிரியர் பயிற்சிகளை முன்னெடுக்கலாம் என கருதுகிறேன். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X