Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 03 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம், அண்மையில் முச்சக்கர வண்டி களியாட்ட தொடருக்கு அனுசரணை வழங்கியிருந்தது.
சிரச வானொலி மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த களியாட்ட நிகழ்வில் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு குதூகலம் மற்றும் கேளிக்கைகள் நிறைந்த நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த களியாட்ட நிகழ்வுகள் கடந்த ஒக்டோபர் மாதம் இரத்தினபுரி, குளியாப்பிட்டிய, பெலவத்த, கண்டி மற்றும் காலி நகரங்களில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், மேலும் இம்மாதம் மொனராகலை நகரிலும் இடம்பெற்று வருகிறது.
ஜனசக்தி ஊழியர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வாகன தரிப்பிடத்திற்கே சென்று ஸ்டிக்கர்களை ஒப்படைத்து அவர்களை தனிப்பட்ட முறையில் களியாட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
'ஏனைய காப்புறுதி வழங்குநர்கள் தடம் பதிக்க தயங்கிய துறையில், முச்சக்கர வண்டி சந்தையில் முதல் முறையாக ஜனசக்தியே பிரவேசித்தது. இந்த களியாட்டங்கள் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு தங்கள் குடும்பங்களுடன் குதூகலமாக பொழுதினை போக்க வாய்ப்புகளை வழங்கி, அவர்களது வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதை நோக்கமாக கொண்டிருந்தன. உள்நாட்டு சமூகத்துடன் மிக ஆழமான புரிதலை கொண்டுள்ள நிறுவனம் எனும் வகையில், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மீதான எமது அர்ப்பணிப்பு கருதி இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம்' என ஜனசக்தி நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் கௌஷலா அமரசேகர தெரிவித்தார்.
இந்த முச்சக்கர வண்டி களியாட்ட நிகழ்வில் சிறுவர்களுக்கான விசேட விளையாட்டு பிரதேசம், விளையாட்டுகள், முச்சக்கர வண்டி ஓட்டப்போட்டிகள், பாடல் போட்டி மற்றும் 'சிறந்த ஆணழகன்' போட்டிகளும் இடம்பெற்றிருந்தன. இதன் போது சிறந்த முறையில் திருத்தியமைக்கப்பட்ட முச்சக்கர வண்டிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன.
ஜனசக்தி நிறுவனம் கடந்த காலங்களில் அதன் ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் ஸ்டிக்கர் ஊக்குவிப்பு ஊடாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு ஈடு இணையற்ற பாதுகாப்பை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விரிவான ஃபுல் ஒப்ஷன் திட்டம் மற்றும் ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் ஸ்டிக்கர்களை காட்சிப்படுத்தும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களை சார்ந்திருப்பவர்களுக்கு ஏதேனும் விபத்தின் போது ரூ.500,000 வரையாக விசேட பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், இந்த நல்லெண்ணமானது ஜனசக்தியை சந்தை தலைமைத்துவம் நோக்கி பயணிக்க வழிவகுத்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஃபுல் ஒப்ஷன் திட்டத்தை கொண்டிராத முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் ஜனசக்தி ஃபுல் ஒப்ஷன் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தியிருந்தால் அவர்கள் விபத்தின் போது மரணிக்க நேருமானால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.250இ000 வரையான நஷ்டஈடு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
29 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
8 hours ago