2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ரயர் உள்மடிப்பு சந்தையில் பிரவேசிக்கும் Maps இன்டர்நஷனல்

A.P.Mathan   / 2015 மே 22 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன ரயர்கள், ரயர் ரீபில்டிங் மற்றும் கட்டட மூலப்பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபடும் Maps இன்டர்நஷனல் கம்பனி அண்மையில் ரயர் உள்மடிப்பு உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. 

வட்டரேக, பன்னலுவ சுதந்திர வர்த்தக வலய பகுதியில் அமைந்துள்ள நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலையில் இந்த Maps இன்டர்நஷனல் ரயர் உள்மடிப்பு தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கை சந்தையில் ரயர் உள்மடிப்பு நாமங்களான 'Maps' மற்றும் 'Unicorn' ஆகியன சுபவேளையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

ரயர் உள்மடிப்புகள், வாகன ரயர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. அதாவது, ரயர்களுக்கும் ரிம்களுக்கும் இடையிலான உராய்வை குறைப்பது இதன் மூலம் இடம்பெறுகிறது. 

Maps இன்டர்நஷனல் பிரைவேற் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'இலங்கைச் சந்தைக்கு ஒரு மாத காலப்பகுதிக்கு அவசியமான மொத்த தேவையில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்யும் ஆற்றலை கொண்டுள்ளது. எமது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ரயர்களின் உள்மடிப்பு என்பது உலகத்தரம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன. எமது நாட்டின் வாகன உரிமையாளர்களுக்கு பசுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கும். புதிய உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பின்பற்றி 'Maps' மற்றும் 'Unicorn' ரயர் உள்மடிப்பு வர்த்தக நாமங்களை உற்பத்தி செய்கிறோம்' என்றார். 

மேலும், இந்த ரயர் உள்மடிப்பு உற்பத்தி என்பது பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் மூலமாக முன்னெடுக்கப்படுகிறது. காலநிலை மாற்றங்கள் மற்றும் வீதிகளின் நிலைகள் போன்றன தொடர்பில் இந்த ஆய்வுகளில் ஆராயப்பட்டிருந்தது. இதன் மூலம் உள்நாட்டு சந்தைக்கு மிகவும் பொருத்தமான ரயர் உள்மடிப்புகளை உற்பத்தி செய்ய முடியும். எமது தொழிற்சாலையின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் 2016ஆம் ஆண்டில் நாம் சர்வதேச சந்தையில் பிரவேசிக்க திட்டமிட்டுள்ளோம்' என ரத்நாயக்க மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X