Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 மே 23 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றியமைக்கும் வகையில், வருடாந்தம் முன்னெடுக்கும் 'தீவா காணி அதிர்ஷ்டம்' நிகழ்வை தொடர்ச்சியான ஐந்தாவது வருடமாகவும் 2015 மே மாதம் 1 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 31ஆம் திகதி வரை முன்னெடுத்து வருகிறது.
ஹேமாஸ் மெனுஃபெக்ஷரிங் நிறுவனத்தின் முன்னணி டிடர்ஜன்ட் வர்த்தக நாமமான தீவா, நுகர்வோருக்கு ஆடைகளை கழுவும் வேலைப்பழுவை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், நுகர்வோருக்கு சகாயமான விலையில் ஆடைகளை கழுவும் பவுடர் வகைகளை அறிமுகம் செய்த வண்ணமுள்ளது. கடந்த வருடங்களில் தொடர்ச்சியாக தனது உற்பத்திகளை மேம்படுத்தியிருந்ததுடன், அண்மையில் தனது புதிய உற்பத்தி தெரிவுகளை அறிமுகம் செய்திருந்தது.
உள்நாட்டு டிடர்ஜன்ட் சந்தையில் முன்னோடியாக திகழும் தீவா, தனது நுகர்வோருடன் தொடர்ந்தும் தொடர்புகளை பேணியிருந்தது. தமக்கென சொந்த காணியொன்றை கொண்டிருப்பது என்பது பல இலங்கையர்களின் கனவாக திகழ்கிறது. இதற்கமைய, தீவா இலங்கையர்களுக்கு பெறுமதி வாய்ந்த காணிகளை அன்பளிப்பாக வழங்க முன்வந்திருந்தது. ஹேமாஸ் தமது நுகர்வோரின் வாழ்வுக்கு வளமூட்டும் நடவடிக்கைகளுக்கமைய, கொழும்பை அண்மித்து 'தீவா காணி அதிர்ஷ்டம்' எனும் ஊக்குவிப்பு திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
முன்னர் இடம்பெற்ற ஊக்குவிப்பு திட்டங்களுக்கமைய, வெற்றியாளர்களுக்கு கொழும்பை அண்மித்து 10 பேர்ச்கள் கொண்ட காணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தன. இன்று வரை மொத்தமாக 16 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் 16 காணித்துண்டுகளை வெற்றியீட்டியுள்ளனர். மொத்தமாக 1 ஏக்கர் பரப்பு காணி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கையர்களின் வாழ்க்கையை வளமூட்டும் வகையில் தீவா வர்த்தக நாமம், 300 பணப் பரிசுகளையும், தங்க நாணயங்களையும் மோட்டார் சைக்கிள்களையும் கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கியிருந்தது.
2014 ஆம் ஆண்டு வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தவர்களில் ஒருவரான உடுபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த நிஷாந்த வீரசிங்க கருத்து தெரிவிக்கையில், 'தீவா பயன்படுத்தியதால் என்னால் பணத்தையும், நேரத்தையும், வலுவையும் சேமிக்க முடிந்திருந்தது. தீவாவிடமிருந்து நான் எதிர்பாராத அன்பளிப்பு எனக்கு கிடைத்திருந்தது. தீவா தெரிவு செய்திருந்ததன் மூலமாக நான் சரியான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தேன் என்பது இப்போது உறுதியாகியுள்ளது' என்றார்.
கடந்த ஆண்டு தெரிவாகியிருந்த மற்றுமொரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளரான சிசிர ஆனந்த கருத்து தெரிவிக்கையில், 'எட்டு வருடங்களுக்கு மேலாக நான் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். காணி ஒன்றை வாங்குவதற்கு பணம் சம்பாதிக்கும் வகையில் எனது மனைவி வெளிநாடு சென்றார். எனது ஒரே குழந்தை என் உறவினர்களுடன் வாழ்ந்து வருகிறது. இந்த காணி கிடைத்ததன் மூலமாக, நாம் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
தீவா காணி அதிர்ஷ்டம் நுகர்வோர் ஊக்குவிப்பு திட்ட அணி, நகரங்களிலும் கிராமங்களிலும் தமது விஜயங்களை மேற்கொண்டு, நுகர்வோருக்கு இந்த திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இந்த செயற்பாட்டின் மூலமாக தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு இந்த நுகர்வோர் ஊக்குவிப்பு திட்டத்தில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். நுகர்வோர்கள் தீவா மேலுறைகளை(தீவா சவர்க்காரம், தீவா ரெகியுலர் அல்லது தீவா ஃபிளவர்ஸ்) ஆகியவற்றை தபால் பெட்டி இல. 1289, கொழும்பு எனும் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாக இந்த திட்டத்தில் பங்குபற்ற முடியும்.
இந்த ஆண்டு மொத்தமாக 3 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், கொழும்பை அண்மித்து காணிகள் இவர்களுக்கு வழங்கப்படும். மேலும், தீவா வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயங்களை வாராந்த அடிப்படையிலும், 10,000 ரூபாய் பணப்பரிசுகளை நாளாந்த அடிப்படையில் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
தொடர்ச்சியான ஐந்தாவது ஆண்டாக, தீவா தனது வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் காணித் துண்டொன்றை பரிசாக வழங்க முன்வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஈடுபாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட பங்குபற்றல் போன்றவற்றின் மூலமாக அதிகளவு எதிர்பார்க்கப்படும் வருடாந்த நிகழ்வாக அமைந்துள்ளது' என ஹேமாஸ் மெனுபக்ஷரிங் நிறுவனத்தின் தீவா வர்த்தகநாம முகாமையாளர் ஷானக பிரனாந்து தெரிவித்தார்.
தீவா அறிமுக நிகழ்வாக 'தீவா வட்டத்துக்கு காணி' என்பது 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கொழும்பை அண்மித்து பெறுமதி வாய்ந்த காணிகள் இதன் போது அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன. 2012இல், 'புதையலுடன் காணி' திட்டம் என்பதன் மூலமாக 3 பெறுமதி வாய்ந்த காணித்துண்டுகள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன. 2013 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டத்தின் மூலம், 'புதையலுடன் காணி' 4 பெறுமதி வாய்ந்த காணித்துண்டுகள் கொழும்பை அண்மித்து வழங்கப்பட்டிருந்தன. கடந்த ஆண்டில் மொத்தமாக 5 அதிர்ஷ்டசாலி நுகர்வோருக்கு காணிகளை வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
தீவா தற்போது வொஷிங் பவுடர் தெரிவுகளை கொண்டுள்ளது, தீவா ரெகியுலர் என்பது எலுமிச்சை நறுமணத்தை கொண்டுள்ளது. தீவா ஃபிளவர்ஸ் என்பது ரோஜா மற்றும் எலுமிச்சை மற்றும் மல்லிகை மற்றும் எலுமிச்சை ஆகிய நறுமணங்களில் காணப்படுகின்றன. மேலும், புதிய மேம்படுத்தப்பட்ட தீவா சவர்க்கார தெரிவுகளையும் தீவா கொண்டுள்ளது. இவை எலுமிச்சை, மல்லிகை ஆகிய நறுமணங்களில் காணப்படுகின்றன. தீவா வைட் பவர் டிடர்ஜன்ட் பவுடர் நாட்டின் முன்னணி சுப்பர் மார்க்கெட்களில் கிடைக்கின்றன. இதன் மூலமாக சலவை இயந்திரங்களின் மூலமான கழுவுதலுக்கும் சிறந்ததாக அமைந்துள்ளது. தீவா மூலமாக, திரவ நீல தயாரிப்புகளும் வழங்கப்படுவதால், பரிபூரண கழுவல் தீர்வுகள் தீவாவினால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
37 minute ago
49 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
49 minute ago
8 hours ago